திருப்பூர் : திருப்பூர் ரயில்வே ஸ்டேஷனில், 'பேட்டரி கார்' வசதி செய்ய வேண்டுமென, சக் ஷம் அமைப்பினர் கோரிக்கை வைத்துள்ளனர்.
இது குறித்து, மத்திய ரயில்வே அமைச்சருக்கு, சக் ஷம் மாவட்ட தலைவர் ரத்தினசாமி, செயலாளர் தமிழ்செல்வன் அனுப்பிய மனு:ஜவுளி ஏற்றுமதி வர்த்தகத்தில் புகழ்பெற்ற திருப்பூர் நகரில் உள்ள, ரயில்வே ஸ்டேஷன், வெளிமாநில பயணிகளின் போக்குவரத்துக்கு அதிகம் பயன்படுத்தப்படுகிறது.திருப்பூரில் இருந்து, முக்கிய ரயில்வே ஸ்டேஷன்களுக்கு சென்றுவரும் வசதியும் உள்ளது.கடந்த, 2018 கணக்கெடுப்பின்படி, திருப்பூரில் இருந்து, தினமும், 33 ஆயிரம் பயணிகள் ரயில் பயணத்தை மேற்கொண்டுள்ளனர்.
ரயில்வே ஸ்டேஷன், இரண்டு பிளார்ட்பார்ம்களுடன் அமைந்துள்ளது. மாற்றுத்திறனாளிகள் சென்றுவர போதிய வசதிகள் இல்லை. ரயில்வே ஸ்டேஷனில், சக்கர நாற்காலி இருந்தாலும், அதை இயக்க ஆளில்லை. மாற்றுத்திறனாளிகள், முதியோர் மிகவும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். எனவே, 'பேட்டரி கார்' வசதியை செய்து கொடுக்க வேண்டும்.இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE