அரசியல் செய்தி

தமிழ்நாடு

மாற்றுத் திறனாளிகளுக்கு முதல்வர் வேண்டுகோள்

Added : டிச 03, 2020
Share
Advertisement
சென்னை:'தமிழக அரசின் நலத் திட்டங்களை, மாற்றுத் திறனாளிகள் அனைவரும் பயன்படுத்தி, வாழ்வில் உயர வேண்டும்' என, முதல்வர் பழனிசாமி., கேட்டுக் கொண்டுள்ளார்.முதல்வர் வெளியிட்டுள்ள செய்தி:ஒவ்வொரு ஆண்டும், டிச., 3ல், 'மாற்றுத் திறனாளிகள் தினம்' அனுசரிக்கப்படுகிறது. இந்நாளில், அனைத்து மாற்றுத் திறனாளிகளுக்கும் என் வாழ்த்துக்கள்.மாற்றுத் திறனாளிகளுக்கு, 1,500 ரூபாய் மாதாந்திர

சென்னை:'தமிழக அரசின் நலத் திட்டங்களை, மாற்றுத் திறனாளிகள் அனைவரும் பயன்படுத்தி, வாழ்வில் உயர வேண்டும்' என, முதல்வர் பழனிசாமி., கேட்டுக் கொண்டுள்ளார்.

முதல்வர் வெளியிட்டுள்ள செய்தி:ஒவ்வொரு ஆண்டும், டிச., 3ல், 'மாற்றுத் திறனாளிகள் தினம்' அனுசரிக்கப்படுகிறது. இந்நாளில், அனைத்து மாற்றுத் திறனாளிகளுக்கும் என் வாழ்த்துக்கள்.மாற்றுத் திறனாளிகளுக்கு, 1,500 ரூபாய் மாதாந்திர உதவித் தொகை வழங்கப் படுகிறது. இணைப்பு சக்கரங்கள் பொருத்தப்பட்ட, இலவச 'பெட்ரோல் ஸ்கூட்டர்'கள், இலவச பஸ் பாஸ், அரசு பணியில், 4 சதவீதம் இட ஒதுக்கீடு என, பல்வேறு நலத் திட்டங்களை, அரசு செயல்படுத்தி வருகிறது.அரசு உதவிகளைப் பயன்படுத்தி வாழ்வில் முன்னேற வேண்டும். இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.

மாற்று திறனுடையோர் சங்கங்கள் கூட்டமைப்பின் மாநில தலைவர் சிம்மச்சந்திரன் கூறியதாவது:கடந்த, 29 ஆண்டுகளாக மாற்றுத்திறனாளிகள் தினம் கொண்டாடப்பட்டு வந்த நிலையில், இந்த ஆண்டு கொரோனாவை காரணம் காட்டி, விழாவை தமிழக அரசு ரத்து செய்துள்ளது கண்டனத்திற்குரியது.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X