பொது செய்தி

தமிழ்நாடு

தொழில்நுட்ப ஜவுளித்துறை மேம்படும்!

Added : டிச 03, 2020
Share
Advertisement
திருப்பூர் : புதிய கவுன்சில் உருவாக்குவதன் மூலம், நாட்டின் தொழில்நுட்ப ஜவுளி துறை வளர்ச்சி அடையும் என்கிற நம்பிக்கை பிறந்துள்ளது. ஏ.இ.பி.சி., தலைவர் சக்திவேல் வெளியிட்டுள்ள அறிக்கை:கொரோனாவுக்கு முன் வரை, உள்நாட்டில் முழு கவச ஆடை உற்பத்தி இல்லாத நிலையே காணப்பட்டது; ஆனால், கடந்த மே முதல், நாளொன்றுக்கு ஐந்து லட்சம் முழு கவச ஆடை உற்பத்தி செய்யும் தொழில்நுட்பம்

திருப்பூர் : புதிய கவுன்சில் உருவாக்குவதன் மூலம், நாட்டின் தொழில்நுட்ப ஜவுளி துறை வளர்ச்சி அடையும் என்கிற நம்பிக்கை பிறந்துள்ளது.

ஏ.இ.பி.சி., தலைவர் சக்திவேல் வெளியிட்டுள்ள அறிக்கை:கொரோனாவுக்கு முன் வரை, உள்நாட்டில் முழு கவச ஆடை உற்பத்தி இல்லாத நிலையே காணப்பட்டது; ஆனால், கடந்த மே முதல், நாளொன்றுக்கு ஐந்து லட்சம் முழு கவச ஆடை உற்பத்தி செய்யும் தொழில்நுட்பம் நிறுவப்பட்டுள்ளன. ஏற்றுமதிக்கு அனுமதி அளிக்கப்பட்டதால், இவ்வகை ஆடை உற்பத்தி துறை மேலும் வளர்ச்சி அடைந்து வருகிறது.கடந்த 2019, ஜன., மாதம் தொழில்நுட்ப ஜவுளி என அறிவிக்கப்பட்ட 207ல், 12 பொருள், ஆயத்த ஆடை உற்பத்தி துறை சார்ந்து உள்ளன. மத்திய அரசு, தொழில்நுட்ப ஜவுளித்துறைக்கான பிரத்யேக ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் உருவாக்க உள்ளது.

இதன்மூலம் இந்த துறை, பன்மடங்கு வளர்ச்சி பெறும்.பிரத்யேக கவுன்சில் உருவாக்கி, சிறப்பு திட்டங்களை செயல்படுத்துவதன்மூலம், நாட்டின் தொழில்நுட்ப ஜவுளி உற்பத்தி மற்றும் வர்த்தகத்தை, அதிகரிக்க முடியும்.இவ்வாறு, அவர் அதில் கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X