லாஸ் ஏஞ்சலஸ்: 'கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில், அடுத்த ஆண்டு நடைபெறும், 93வது, 'ஆஸ்கர்' விருதுகள் வழங்கும் விழாவில், வெற்றி பெற்றவர்களுக்கு, 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக அல்லாமல், நேரடியாகவே விருதுகள் வழங்கப்படும்' என, ஆஸ்கர் விருதுகள் வழங்கும் குழு தெரிவித்துள்ளது.
ஒவ்வொரு ஆண்டும், ஆஸ்கர் விருதுகள் எனப்படும், 'அகாடமி' விருதுகள், திரைத் துறையில் சிறந்து விளங்கும் நபர்களுக்கு, வழங்கி, கவுரவிக்கப்பட்டு வருகின்றன. 93வது, அகாடமி விருதுகள் வழங்கும் விழா, அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் நடத்த, முதலில் திட்டமிடப்பட்டிருந்தது.ஆனால், கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, அந்த விழா, எட்டு வாரங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டது. அதன்படி, அடுத்த ஆண்டு ஏப்ரல், 25ல், கலிபோர்னியாவின் லாஸ் ஏஞ்சலஸ் நகரில் உள்ள, 'டால்பி' தியேட்டரில், இந்த விழா நடைபெற உள்ளது.
![]()
|
இதற்கிடையே, கொரோனா வைரஸ் பரவலால், அந்த விழா, 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக நடத்தப்படலாம் என்ற தகவல் வெளியானது. இந்நிலையில், அந்த தகவலை, ஆஸ்கர் விருதுகள் வழங்கும் குழு, நேற்று மறுத்துள்ளது.இதுகுறித்து, ஆஸ்கர் குழுவின் பிரதிநிதி ஒருவர் கூறியதாவது:வரும், 2021 ஏப்ரல், 25ல், ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா, டால்பி தியேட்டரில் நடைபெறவுள்ளது. அப்போது, வெற்றி பெற்றவர்களுக்கு, வழக்கம்போல், நேரிடையாகவே விருதுகள் வழங்கப்படும்.டால்பி தியேட்டரில், 3,400 இருக்கைகள் உள்ளன. விழாவின்போது, எத்தனை பேர் அனுமதிக்கப்படுவர் என்ற விவரங்களை பிறகு வெளியிடுவோம்.இவ்வாறு, அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE