அரசியல் செய்தி

தமிழ்நாடு

மதுரையில் மையங்கொண்டுள்ள புயலால் தி.மு.க.,வுக்கு பாதிப்பு: அமைச்சர் உதயகுமார் ஆரூடம்

Added : டிச 03, 2020
Share
Advertisement
மதுரை:''மதுரையில் மையங்கொண்டுள்ள அழகிரி புயலால் தி.மு.க.,வுக்கு பாதிப்பு உண்டாகுமென மக்கள் பேசுகின்றனர்,'' என மதுரையில் ஒருங்கிணந்த கலெக்டர் அலுவலக கட்டுமான இறுதி பணிகளை ஆய்வு செய்த அமைச்சர் உதயகுமார் தெரிவித்தார்.அவர் கூறியதாவது: புரெவி புயலை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப் பட்டு உள்ளன. தென் கிழக்கு, தென்மேற்கு வங்ககடலில் இப்புயல் மையங்

மதுரை:''மதுரையில் மையங்கொண்டுள்ள அழகிரி புயலால் தி.மு.க.,வுக்கு பாதிப்பு உண்டாகுமென மக்கள் பேசுகின்றனர்,'' என மதுரையில் ஒருங்கிணந்த கலெக்டர் அலுவலக கட்டுமான இறுதி பணிகளை ஆய்வு செய்த அமைச்சர் உதயகுமார் தெரிவித்தார்.

அவர் கூறியதாவது: புரெவி புயலை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப் பட்டு உள்ளன. தென் கிழக்கு, தென்மேற்கு வங்ககடலில் இப்புயல் மையங் கொண்டுள்ளது. ஆறு மணி நேரமாக ஆறு கி.மீ., வேகத்தில் நகர்ந்து வருகிறது. தமிழகத்தில் சில இடங்களில் 95 கி.மீ., வேகத்தில் காற்று வீசும். இப்புயல் கன்னியாகுமரி, பாம்பன் இடையே கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கனமழையால் நீர் நிலை களிலிருந்து உபரிநீர் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டு வருகிறது. மதுரையில் 300 இடங்களில் மழைநீர் தேங்கும் என கண்டறியப்பட்டுள்ளது.கன்னியாகுமரி, துாத்துக்குடி, தென்காசி, ராமநாதபுரம் மாவட்டங்களில் நிவாரண முகாம்கள் தயார் நிலையில் உள்ளன. புயலின் நிலையை கண்காணித்த பிறகு விடுமுறை குறித்து அறிவிப்பு வெளியிட முடியும்.

தி.மு.க.,வில் உருவாகும் பூகம்பம் வலுப்பெறுமா, வலு பெறாதா என தெரியவில்லை. அழகிரி புயலை எதிர்கொள்ள தி.மு.க., தலைவர் ஸ்டாலின் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் அழகிரி புயல் தி.மு.க.,வை தாக்கும்.தி.மு.க., ஆட்சியில் கட்டபஞ்சாயத்து, ரவுடியிசம் இருந்தது. 2021 லிலும் முதல்வர் பழனிசாமி தலைமையில் ஆட்சி அமைக்க மக்கள் முன்வந்து உள்ளனர்.

புயல் வரும் போது முதல்வர் சுறாவளியாக சுழன்று நடவடிக்கை எடுத்தார். ஆனால் கொரோனா காலத்தில் தி.மு.க.,வினர் எங்கு சென்றனர், என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X