சம்பவம் செய்தி

தமிழ்நாடு

164 பயணியர் உயிர் தப்பினர்

Added : டிச 03, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
சென்னை:நடுவானில் இயந்திர கோளாறு ஏற்பட்டதால், இலங்கை சென்ற விமானம், சென்னை விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. உரிய நேரத்தில் கோளாறை, விமான பைலட் கண்டறிந்ததால், பயணியர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.வங்கதேசம் தலைநகர்தாக்காவில் இருந்து, இலங்கை தலைநகர் கொழும்புக்கு, 164 பயணியருடன், 'ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்' விமானம், நேற்று இரவு சென்று கொண்டிருந்தது.அந்த விமானம்,

சென்னை:நடுவானில் இயந்திர கோளாறு ஏற்பட்டதால், இலங்கை சென்ற விமானம், சென்னை விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. உரிய நேரத்தில் கோளாறை, விமான பைலட் கண்டறிந்ததால், பயணியர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

வங்கதேசம் தலைநகர்தாக்காவில் இருந்து, இலங்கை தலைநகர் கொழும்புக்கு, 164 பயணியருடன், 'ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்' விமானம், நேற்று இரவு சென்று கொண்டிருந்தது.அந்த விமானம், இந்திய வான்வெளியை கடந்து கொண்டிருந்தபோது, இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டிருந்ததை, பைலட் கண்டறிந்தார்.அருகில் இருந்த சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறையான ஏ.டி.சி.,யை, பைலட் தொடர்பு கொண்டு, விமானத்தை சென்னையில் அவசரமாக தரையிறக்க அனுமதி கோரினார்.

ஏ.டி.சி., அனுமதிப்படி, சென்னை விமான நிலையத்தில், இலங்கை விமானத்தை அவசரமாக தரையிறக்க, அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைளும் எடுக்கப்பட்டு, அந்த விமானம் நேற்று இரவு, 8:00 மணிக்கு பத்திரமாக தரையிறங்கியது.விமான பயணியர் அனைவரும், சென்னை விமான நிலைய ஓய்வறையில் தங்க வைக்கப்பட்டனர். விமானத்தில் ஏற்பட்டிருந்த இயந்திர கோளாறை உடனடியாக சரி செய்ய முடியவில்லை.எனவே, பயணியர் அனைவரும், இலங்கையில் இருந்து வரும் மாற்று விமானத்தில், அனுப்பி வைக்கப்பட உள்ளனர். இலங்கை விமான பைலட், உரிய நேரத்தில் இயந்திர கோளாறை கண்டறிந்ததால், 164 பயணியர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
R S BALA - Tiruvallur,இந்தியா
03-டிச-202015:11:14 IST Report Abuse
R S BALA எல்லாம் அவன் செயல் ...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X