வேலுார்:வேலுார் சிறையில், 11வது நாளாக உண்ணாவிரதம் இருக்கும், ராஜிவ் கொலையாளி முருகனுக்கு குளுக்கோஸ் ஏற்றப்பட்டது.
முன்னாள் பிரதமர் ராஜிவ் கொலை வழக்கில், ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட முருகன், வேலுார் மத்திய ஆண்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். தன்னை, விடுதலை செய்யுங்கள் அல்லது ஜீவசமாதி அடைய அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தி, கடந்த மாதம், 22ல் இருந்து உண்ணாவிரதம் இருந்து வருகிறார். நேற்று, 11வது நாளாக உண்ணாவிரதம் இருந்தார்.
சிறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியும், உண்ணாவிரதத்தை கைவிட மறுத்து விட்டார். இதனால் முருகனின் உடல் நிலையை பரி சோதிக்க, டாக்டர்கள் கூறினர். அவரது ரத்த அழுத்தம், ஆக்ஸிஜன் அளவு குறித்து, பரிசோதனை செய்யப்பட்டது. முருகன் சோர்வுடன் இருப்பதால், அவருக்கு, ஒரு பாட்டில் குளுக்கோஸ் ஏற்றப்பட்டதாக, சிறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE