பொது செய்தி

தமிழ்நாடு

கோவை - நாகர்கோவில் ரயில் வரும் 8ம் தேதி முதல் இயக்கம்

Added : டிச 03, 2020
Share
Advertisement
திருப்பூர்:கோவை- நாகர்கோவில் சிறப்பு ரயில், வரும் 8ம் தேதி முதல் இயக்கப்படுகிறது. கோவையில் இருந்து வரும் 8ம் தேதி முதல், தினமும் இரவு 7:30 மணிக்குப் புறப்படும் அதிவிரைவு சிறப்பு ரயில்(எண்: 02668), மறுநாள் காலை 5:05 மணிக்கு நாகர்கோவில் சென்றடையும்.மறுமார்க்கமாக, வரும் 9ம் தேதி முதல் நாகர்கோவிலில் இருந்து தினமும் இரவு 9:45க்கு புறப்படும் சிறப்பு ரயில், மறுநாள் காலை 7:15 மணிக்கு கோவை

திருப்பூர்:கோவை- நாகர்கோவில் சிறப்பு ரயில், வரும் 8ம் தேதி முதல் இயக்கப்படுகிறது. கோவையில் இருந்து வரும் 8ம் தேதி முதல், தினமும் இரவு 7:30 மணிக்குப் புறப்படும் அதிவிரைவு சிறப்பு ரயில்(எண்: 02668), மறுநாள் காலை 5:05 மணிக்கு நாகர்கோவில் சென்றடையும்.மறுமார்க்கமாக, வரும் 9ம் தேதி முதல் நாகர்கோவிலில் இருந்து தினமும் இரவு 9:45க்கு புறப்படும் சிறப்பு ரயில், மறுநாள் காலை 7:15 மணிக்கு கோவை வந்தடையும்.

இந்த ரயில், திருப்பூர், ஈரோடு, கரூர், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், வாஞ்சி மணியாச்சி, திருநெல்வேலி, வள்ளியூர் உட்பட ரயில் நிலையத்தில் நின்று செல்லும்.சென்னை - பாலக்காடு ரயில்சென்னை சென்ட்ரல் - பாலக்காடு சிறப்பு ரயில், சென்னையில் இருந்து வரும் 8-ம் தேதி முதல், இரவு 9:40க்கு புறப்பட்டு, மறுநாள் காலை 10:10க்கு பாலக்காடு சென்று சேரும். மறுமார்க்கத்தில், பாலக்காடு - சென்னை சென்ட்ரல் சிறப்பு ரயில், வரும் 9ம் தேதி முதல் பாலக்காட்டில் இருந்து மதியம் 3:35க்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 4:05க்கு சென்னை சென்றடையும்.

இந்த ரயில்கள் திருவள்ளூர், அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், நாமக்கல், மோகனுார், கரூர், திண்டுக்கல், ஒட்டன்சத்திரம், பழனி, உடுமலை, பொள்ளாச்சி, பாலக்காடு டவுன் ஆகிய இடங்களில் நின்று செல்லும்.இந்த இரு ரயில்களையும் இயக்க, பயணிகள் கோரிக்கை விடுத்து வந்தனர். தற்போது ரயில்கள் இயக்கப்படுவதால், பயணியர் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X