பொது செய்தி

இந்தியா

உள்நாட்டு விமானம் தாங்கி கப்பல் 2022ல் கடற்படையில் இணைப்பு

Added : டிச 03, 2020
Share
Advertisement
கொச்சி:“உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டு வரும் விமானம் தாங்கி போர்க்கப்பல், அடுத்த ஆண்டு இறுதியில், அல்லது, 2022ம் ஆண்டு துவக்கத்தில், இந்திய கடற்படையில் இணைக்கப்படும்,” என, கடற்படை துணை தளபதி அனில் குமார் சாவ்லா தெரிவித்துள்ளார்.கேரளாவின் கொச்சியில் உள்ள, 'கொச்சி ஷிப்யார்ட் லிமிடெட்' என்ற, கப்பல் கட்டும் தளத்தில், இந்திய கடற்படைக்காக, விமானம் தாங்கி போர்க்கப்பல்

கொச்சி:“உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டு வரும் விமானம் தாங்கி போர்க்கப்பல், அடுத்த ஆண்டு இறுதியில், அல்லது, 2022ம் ஆண்டு துவக்கத்தில், இந்திய கடற்படையில் இணைக்கப்படும்,” என, கடற்படை துணை தளபதி அனில் குமார் சாவ்லா தெரிவித்துள்ளார்.

கேரளாவின் கொச்சியில் உள்ள, 'கொச்சி ஷிப்யார்ட் லிமிடெட்' என்ற, கப்பல் கட்டும் தளத்தில், இந்திய கடற்படைக்காக, விமானம் தாங்கி போர்க்கப்பல் ஒன்று, தயாரிக்கப்பட்டு வருகிறது. உள்நாட்டிலேயே தயாரிக்கப்படும் இந்த கப்பலின் கட்டுமான பணிகள், முடிவடைய உள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.இதுகுறித்து, கடற்படை துணை தளபதி அனில் குமார் சாவ்லா, கூறியதாவது:

உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டு வரும் விமானம் தாங்கி போர்க்கப்பலின் கட்டுமான பணிகள், இறுதிகட்டத்தை எட்டியுள்ளன. அடுத்த ஆண்டு இறுதியில், அல்லது, 2022ம் ஆண்டு துவக்கத்தில், இந்த கப்பல், கடற்படையில் இணைக்கப்படும்.இந்த கப்பலின் பரிசோதனைகளை, அடுத்த ஆண்டு நடத்த திட்டமிட்டுள்ளோம். கடலில் இயக்கி செய்யும் சோதனைகள், முதல் ஆறு மாதங்களில் நடத்தப்படும். பின், அந்த கப்பலில், விமானங்களை தரையிறக்கி செய்யப்படும் சோதனைகள், கடைசி ஆறு மாதங்களில் மேற்கொள்ளப்படும்.

கட்டுமான தளத்தில், கப்பலின் இயந்திரங்கள், கடந்த, 30ம் தேதி, பரிசோதிக்கப்பட்டன. அந்த பரிசோதனைகள், வெற்றிகரமாக முடிந்தன. கடலுக்குள் பரிசோதனைகள் மேற்கொள்ள, கப்பல் தயாராக உள்ளது.இந்த விமானம் தாங்கி கப்பல், 'தற்சார்பு இந்தியா' திட்டத்தின் உண்மையான சான்று. இந்த கப்பலில் பொருத்தப்பட்டுள்ள, 75 சதவீத பொருட்களும், உபகரணங்களும், உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டவை ஆகும்.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X