பொது செய்தி

தமிழ்நாடு

சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கனமழை

Updated : டிச 03, 2020 | Added : டிச 03, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
சென்னை : தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருவதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.தமிழகம் மற்றும் புதுச்சேரியின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. சென்னையில் அடுத்த 3 மணி நேரத்திற்கு கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. புரெவி புயல் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும்

சென்னை : தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருவதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.



latest tamil news



தமிழகம் மற்றும் புதுச்சேரியின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. சென்னையில் அடுத்த 3 மணி நேரத்திற்கு கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. புரெவி புயல் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.

சென்னையில் போரூர், கிண்டி, மதுரவாயல், ஆலந்தூர், பெரம்பூர் மற்றும் மீனம்பாக்கம் ஆகிய பல்வேறு பகுதிகளில் கனமழையும், சென்னையை ஒட்டிய மகாபலிபுரம் மற்றும் கல்பாக்கம் போன்ற பல்வேறு இடங்களில் பரவலாகவும் மழை பெய்தது.


latest tamil news



தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் விடிய விடிய மழை பெய்து வருகிறது. திருச்சி மற்றும் அதன் சுற்று வட்டாரப்பகுதிகளிலும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. புரெவி புயலால் தஞ்சாவூர், காஞ்சிபுரம், சிவகங்கை, விழுப்புரம், நாகப்பட்டினம், திருச்சி, மதுரை, திருவாரூர், ராமேஸ்வரம் , தூத்துக்குடி , திண்டுக்கல் மற்றும் திருவண்ணாமலை உள்ளிட்ட பல மாவட்டங்களின் பல்வேறு இடங்களிலும் பரவலாக மழை பெய்து வருகிறது.

புதுச்சேரியின் சில இடங்களிலும் கனமழை பெய்து வருகிறது. காரைக்காலில் பலத்த காற்றுடன் 6 மணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்து வருகிறது. தென் தமிழகத்தின் கடற்கரை மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்ட நிலையில், ராமேஸ்வரத்தின் பல்வேறு இடங்களில் பலத்த சூறைக் காற்றுடன் கனமழை பெய்து வருகிறது.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Vittal Anand - Chennai,இந்தியா
03-டிச-202004:12:30 IST Report Abuse
Vittal Anand மழை பெய்ததான வோ நிஜம்.ஆனால் புறநகர் பகுதியில் நிலத்தடி நீர் மட்டம் குறிப்பிடும் அளவுக்கு உயரவில்லை
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X