சம்பவம் செய்தி

தமிழ்நாடு

காயத்துடன் சுற்றும் யானை வனத்துறையினர் சிகிச்சை

Added : டிச 03, 2020
Share
Advertisement
கூடலுார்:முதுமலை அருகே, காயத்துடன் சுற்றி வரும் காட்டு யானைக்கு, வனத்துறையினர் பழத்தில் மாத்திரைகள் வைத்து சிகிச்சை அளித்து, கண்காணித்து வருகின்றனர்.நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகம் சிங்காரா வனச்சரகம், பொக்காபுரம் மாரியம்மன் கோவிலை ஒட்டிய வனப்பகுதியில், ஆண் காட்டு யானை முதுகில் காயத்துடன் உலா வருவதை வன ஊழியர்கள் பார்த்து, அதிகாரிகளுக்கு தகவல்

கூடலுார்:முதுமலை அருகே, காயத்துடன் சுற்றி வரும் காட்டு யானைக்கு, வனத்துறையினர் பழத்தில் மாத்திரைகள் வைத்து சிகிச்சை அளித்து, கண்காணித்து வருகின்றனர்.

நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகம் சிங்காரா வனச்சரகம், பொக்காபுரம் மாரியம்மன் கோவிலை ஒட்டிய வனப்பகுதியில், ஆண் காட்டு யானை முதுகில் காயத்துடன் உலா வருவதை வன ஊழியர்கள் பார்த்து, அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்வனச்சரகர் காந்தன், முதுமலை கால்நடை டாக்டர் ராஜேஷ்குமார், யானை உடல் நிலையை ஆய்வு செய்தனர். 42 வயதுடைய யானையின் முதுகில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.

அருகில் சென்று சிகிச்சை அளிக்க முடியாததால், கால்நடை டாக்டர் ஆலோசனைபடி, வன ஊழியர்கள் தர்பூசணி, அன்னாசி பழங்களில் மாத்திரை வைத்து, யானை வரும் பாதையில் வைத்தனர். அதை யானை ஆர்வத்துடன் உட்கொண்டது. வன ஊழியர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.முதுமலை புலிகள் காப்பக துணை இயக்குனர் ஸ்ரீகாந்த் கூறுகையில்,''யானை ஆரோக்கியத்துடன் உள்ளது. காயம் ஏற்பட்டது குறித்து விசாரித்து வருகிறோம். யானைக்கு யாராவது இடையூறு செய்திருந்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X