சென்னை:நிலுவை தொகையை விரைந்து வழங்குமாறு, மின் வாரியத்திற்கு, காற்றாலை மின் உற்பத்தியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து, இந்திய காற்றாலை மின் உற்பத்தியாளர் சங்கத்தினர் கூறியதாவது:மின் சப்ளை நிறுவனங்களுக்கு தர வேண்டிய நிலுவை தொகையை வழங்குவதற்காக, மத்திய அரசு, 'பவர் பைனான்ஸ், ரூரல் எலக்ட்ரிபிகேஷன்' நிறுவனங்கள் வாயிலாக, தமிழக மின் வாரியத்திற்கு, 31 ஆயிரம் கோடி ரூபாய் கடன் வழங்க ஒப்புதல் அளித்துள்ளது.அந்த கடன் தொகையில் இருந்து, காற்றாலை மின்சாரத்திற்கான பணத்தை வழங்குவதற்காக, 'நிலுவை தொகைக்கு வட்டி கேட்க மாட்டோம்' என, மின்வாரியம் சார்பில், உற்பத்தியாளர்களிடம் உறுதிமொழி கடிதம் கேட்கப்படுகிறது
.மத்திய அரசு, அதுபோன்ற கடிதம் பெறும்படி தெரிவிக்கவில்லை. முதலீட்டாளர்கள், வங்கி களில் இருந்து கடன் வாங்கி தான், காற்றாலை மின் திட்டங்களில் முதலீடு செய்துள்ளனர். அதற்கு, வட்டியும் செலுத்தி வருகின்றனர்.எனவே, உறுதிமொழி கடிதம் கேட்பதை தவிர்த்து, மூன்று ஆண்டுகளாக வழங்க வேண்டிய நிலுவை தொகைக்கு, மின் கொள்முதல் ஒப்பந்தப்படி வட்டியுடன் சேர்த்து விரைந்து வழங்குமாறு, மின் வாரிய தலைவருக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டு உள்ளது.இவ்வாறு, அவர்கள் கூறினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE