சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பொதுப்பணித் துறை அலுவலகம் முற்றுகை

Added : டிச 03, 2020
Share
Advertisement
விருத்தாசலம்; விருத்தாசலம் அருகே பெருந்துறை மணிமுக்தாற்றில் தேர்வு செய்த இடத்தில் தடுப்பணை கட்டக் கோரி, கிராம மக்கள் முற்றுகையிட்டனர்.விருத்தாசலம் பொதுப்பணித்துறை மற்றும் நீர்வள ஆதாரத்துறை சார்பில் மணிமுக்தாற்றில் தடுப்பணைகள் கட்டும் பணி நடக்கிறது. கம்மாபுரம் அடுத்த பெருந்துறை கிராமத்தில் தடுப்பணை கட்ட உறுதியான நிலையில், கோட்டிமுளை கிராமத்திற்கு

விருத்தாசலம்; விருத்தாசலம் அருகே பெருந்துறை மணிமுக்தாற்றில் தேர்வு செய்த இடத்தில் தடுப்பணை கட்டக் கோரி, கிராம மக்கள் முற்றுகையிட்டனர்.விருத்தாசலம் பொதுப்பணித்துறை மற்றும் நீர்வள ஆதாரத்துறை சார்பில் மணிமுக்தாற்றில் தடுப்பணைகள் கட்டும் பணி நடக்கிறது. கம்மாபுரம் அடுத்த பெருந்துறை கிராமத்தில் தடுப்பணை கட்ட உறுதியான நிலையில், கோட்டிமுளை கிராமத்திற்கு மாற்றப்பட்டதாக தகவல் பரவியது.இதனால் ஆத்திரமடைந்த பெருந்துறை கிராம மக்கள் 50க்கும் மேற்பட்டோர், விருத்தாசலத்தில் உள்ள பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு, தேர்வு செய்த இடத்திலேயே தடுப்பணை கட்ட வேண்டும் என கோரினர்.அவர்களிடம், உதவி செயற்பொறியாளர் கோவிந்தராஜ் மற்றும் அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தினர்.பெருந்துறை மணிமுக்தாற்றில் தான் தடுப்பணை கட்டப்பட உள்ளது எனக் கூறியதை யேற்று, கலைந்து சென்றனர். இதனால், அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X