தமிழ்நாடு

பெரும்பாலான ஏரிகள் நிரம்பியது!...விவசாயிகள் மகிழ்ச்சி

Added : டிச 03, 2020
Share
Advertisement
கள்ளக்குறிச்சி மாவட்டம், உணவு தானிய உற்பத்தியில் மாநிலத்திலேயே முக்கிய பங்காற்றி வருகிறது. மாநில உணவு உற்பத்தியில் 10 சதவீதம் இங்கு விளைவிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.ஒருங்கிணைந்த மாவட்டத்தில் முக்கிய நீர் ஆதாரமாக வீடூர், கோமுகி, மணிமுத்தாறு அணைகள் இருந்தாலும், இதன் மூலம் 18 ஆயிரத்து 553 ஏக்கர் நிலங்கள் மட்டுமே பாசன வசதி பெறுகிறது.தென்பெண்ணை ஆற்றின்

கள்ளக்குறிச்சி மாவட்டம், உணவு தானிய உற்பத்தியில் மாநிலத்திலேயே முக்கிய பங்காற்றி வருகிறது. மாநில உணவு உற்பத்தியில் 10 சதவீதம் இங்கு விளைவிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ஒருங்கிணைந்த மாவட்டத்தில் முக்கிய நீர் ஆதாரமாக வீடூர், கோமுகி, மணிமுத்தாறு அணைகள் இருந்தாலும், இதன் மூலம் 18 ஆயிரத்து 553 ஏக்கர் நிலங்கள் மட்டுமே பாசன வசதி பெறுகிறது.தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே இருக்கும் சாத்தனுார் அணையைதான் விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்ட விவசாயிகள் முழுமையாக நம்பியுள்ளனர். இதன் மூலம் 35 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகிறது.தென்மேற்கு பருவமழைக் காலத்தில் 40 சதவீதம் மழைப் பொழிவை இப்பகுதி பெற்றாலும், வடகிழக்கு பருவ மழையை நம்பியே மாவட்ட விவசாயிகள் விவசாயப் பணியை மேற்கொள்ள வேண்டிய கட்டாயம் உள்ளது. ஆண்டின் சராசரி மழையில் 60 சதவீதத்தை வடகிழக்கு பருவமழை கொடுக்கிறது.இச்சூழலில் அக்டோபர் இரண்டாவது வாரத்தில் துவங்க வேண்டிய பருவமழை ஒரு மாதம் தாமதமாக துவங்கினாலும், நவம்பர் கடைசி வாரத்தில் 'நிவர்' புயல் சூறாவளி சேதத்தை ஏற்படுத்தாமல், போதிய மழை பெய்தது.

இதன் காரணமாக கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மாவட்டங்களில் மொத்தம் உள்ள 831 ஏரிகளில், 159 ஏரிகள் முழுமையாக நிரம்பியுள்ளன. 125 ஏரிகள் 75 சதவீதமும், 142 ஏரிகள் 50 சதவீதமும், 185 ஏரிகள் 25 சதவீதமும், 220 ஏரிகள் 25 சதவீதத்திற்கு குறைவாகவும் தண்ணீர் உள்ளது.இச்சூழலில் புதிதாக உருவாகியுள்ள 'புரெவி' புயல் காரணமாக தென் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இருப்பினும் தமிழகம் முழுதும் இந்த மூன்றாவது சுற்று மழை பரவலாக இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருப்பது விவசாயிகளுக்கு மகிழ்ச்சியை அளிக்கும் செயலாகவே உள்ளது.இச்சூழலில் கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மாவட்ட விவசாயிகள் பெரிதும் நம்பியிருக்கும் சாத்தனுார் அணையின் நீர்மட்டம் நேற்று காலை நிலவரப்படி அணையின் மொத்த கொள்ளளவான 7,321 மில்லியன் கன அடியில், 2,770 மில்லியன் கன அடியாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது.

அணைக்கு வினாடிக்கு 497 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது.'புரெவி' புயல் வடகிழக்கு பருவமழையை தீவிரம் அடையச் செய்யும் என்பதால் அணைக்கான நீர்வரத்து அதிகரித்து, 'நிவர்' புயலின்போது பெய்த மழையால் அணைகளுக்கு நீர் வரத்து இருந்ததுபோல் இருக்கும் என விவசாயிகள் நம்பிக்கையுடன் உள்ளனர். அதே நம்பிக்கையில் சம்பா நெல் சாகுபடிக்கான ஆயத்த பணிகளை விவசாயிகள் துவக்கியுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X