பொது செய்தி

தமிழ்நாடு

வங்கிக்கடன் திட்ட புத்தகம் கலெக்டர் வௌியீடு

Added : டிச 03, 2020
Share
Advertisement
கள்ளக்குறிச்சி; கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 2021-22ம் ஆண்டிற்கான வளம் சார்ந்த வங்கிக் கடன் தொகை 4,432.33 கோடி ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டு, புத்தகத்தை கலெக்டர் வெளியிட்டார்.கள்ளக்குறிச்சியில் நடந்த நிகழ்ச்சிக்கு கலெக்டர் கிரண் குராலா தலைமை தாங்கி நபார்டு கடன் திட்ட புத்தகத்தை வெளியிட்டார். மாவட்டத்தில் 2021-22ம் ஆண்டிற்கான வளம் சார்ந்த வங்கிக் கடன் தொகை 4,432.33 கோடி ரூபாயாக தேசிய

கள்ளக்குறிச்சி; கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 2021-22ம் ஆண்டிற்கான வளம் சார்ந்த வங்கிக் கடன் தொகை 4,432.33 கோடி ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டு, புத்தகத்தை கலெக்டர் வெளியிட்டார்.கள்ளக்குறிச்சியில் நடந்த நிகழ்ச்சிக்கு கலெக்டர் கிரண் குராலா தலைமை தாங்கி நபார்டு கடன் திட்ட புத்தகத்தை வெளியிட்டார். மாவட்டத்தில் 2021-22ம் ஆண்டிற்கான வளம் சார்ந்த வங்கிக் கடன் தொகை 4,432.33 கோடி ரூபாயாக தேசிய வேளாண்மைமற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கி நிர்ணயித்துள்ளது.இதில் 2,241.03 கோடி ரூபாய் விவசாய குறுகிய காலக் கடன், 766.15 கோடி ரூபாய் நீண்ட காலக் கடன் என விவசாயத்திற்கு மட்டும் 3,507.80 கோடி ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.மேலும், சிறு, குறு தொழில்களுக்கு 249.46 கோடி ரூபாய், 2022ம் ஆண்டிற்குள் அனைவருக்கும் வீட்டு வசதி என்னும் கொள்கையினை கருதி வீட்டு வசதி கடன் பிரிவில் 164.44 கோடி ரூபாய் மற்றும் கல்விக் கடன் பிரிவில் 133.50 கோடி ரூபாய் இலக்கு நிர்ணயிக்கபட்டுள்ளது.இது நடப்பு ஆண்டை ஒப்பிடும் போது, 12.23 சதவீதம் கூடுதலாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் விவசாயம் முக்கிய தொழிலாக இருப்பதால், மொத்த கடன் தொகை மதிப்பில் 79 சதவீதம் விவசாயத்திற்கென ஒதுக்கப்பட்டுள்ளது.நிகழ்ச்சியில், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் முனீஸ்வரன், நபார்டு வங்கி மாவட்ட உதவி பொது மேலாளர் ரவிசங்கர், வங்கி ஒருங்கிணைப்பாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X