சங்கராபுரம்; சங்கராபுரம் அருகே பணியின் போது இறந்த கிராம நிர்வாக அலுவலர்கள் குடும்பத்திற்கு சங்கத்தின் சார்பில் நிதியுதவி வழங்கப்பட்டது.சங்கராபுரம் அடுத்த சீர்பாதநல்லுார் வி.ஏ.ஓ., வாக பணிபுரிந்த ஜெயப்பிரியா கடந்த மாதம் 5ம் தேதி உடல் நலக்குறைவால் இறந்தார். இதேபோன்று, கடந்த மாதம் 9ம் தேதி மணலுார் வி.ஏ.ஓ., நவநீதன் வாகன விபத்தில் இறந்தார்.பணியின் போது இறந்த ஜெயப்பிரியாகுடும்பத்திற்கு 1 லட்சத்து 5 ஆயிரம் ரூபாயும், நவநீதன் குடும்பத்திற்கு,1 லட்சத்து 45 ஆயிரம் ரூபாயும் தமிழ்நாடுகிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தின் சார்பில்வழங்கப்பட்டது.வட்ட தலைவர் முருகன், செயலாளர் ஆனந்த், கள்ளக்குறிச்சி மாவட்ட செயலாளர் வரதராஜன், மாவட்ட அமைப்பு செயலாளர் பெரியதமிழன், துணைத் தலைவர் ராஜா, ஒருங்கிணைப்பாளர் வினோத், வட்ட இணைச் செயலாளர் மணிகண்டன், வினோத் உடனிருந்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE