கள்ளக்குறிச்சி; 'தினமலர்' நாளிதழ் செய்தி எதிரொலியால் டிரான்ஸ்பார்மருக்கு கீழே வைக்கப்பட்டிருந்த கடைகள் அகற்றப்பட்டன.கள்ளக்குறிச்சி சுந்தர விநாயகர் கோவில் தெருவில் உள்ள உழவர் சந்தைக்கு வெளியே சிலர் சாலையோரம் கடைகள் அமைத்து வியாபாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.அதில் ஒரு சிலர் ஆபத்தினை உணராமல், அங்குள்ள டிரான்ஸ்பார்மர் கீழே கடை வைத்திருந்தனர். மின் ஒயர்கள் ட்ரிப்பாகி தீப்பொறி பட்டு விபத்து ஏற்படும் சூழ்நிலை இருந்தது.இது குறித்து 'தினமலர்' நாளிதழில் படத்துடன் செய்தி வெளியிடப்பட்டது. அதன் எதிரொலியாக, டிரான்ஸ்பார்மர் கீழே யாரும் கடைகள் அமைக்காத வகையில் சுற்றிலும் தடுப்புகள் அமைத்து மின்வாரிய அதிகாரிகள்முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE