பொது செய்தி

தமிழ்நாடு

காவல் துறை பெட்டிஷன் மேளா 75 மனுக்களுக்கு உடனடி தீர்வு

Added : டிச 03, 2020
Share
Advertisement
கள்ளக்குறிச்சி; கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், காவல் துறை சார்பில் நடந்த பெட்டிஷன் மேளாவில் 75 புகார் மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காணப்பட்டது.கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், மூன்று உட்கோட்டத்திற்குட்பட்ட காவல் நிலையங்களில் பொதுமக்கள் அளித்த புகார் மனு மீது விரைவாக விசாரணை நடத்தி தீர்வு காணும் பொருட்டு எஸ்.பி., ஜியாவுல் ஹக் உத்தரவின் பேரில் பெட்டிஷன் மேளா நேற்று

கள்ளக்குறிச்சி; கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், காவல் துறை சார்பில் நடந்த பெட்டிஷன் மேளாவில் 75 புகார் மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காணப்பட்டது.கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், மூன்று உட்கோட்டத்திற்குட்பட்ட காவல் நிலையங்களில் பொதுமக்கள் அளித்த புகார் மனு மீது விரைவாக விசாரணை நடத்தி தீர்வு காணும் பொருட்டு எஸ்.பி., ஜியாவுல் ஹக் உத்தரவின் பேரில் பெட்டிஷன் மேளா நேற்று நடந்தது.கள்ளக்குறிச்சி டி.எஸ்.பி., ராமநாதன் தலைமையில் மகாலட்சுமி திருமண மண்டபத்திலும், உளுந்துார்பேட்டை டி.எஸ்.பி., விஜிகுமார் தலைமையில் அரசு பாலிடெக்னிக் கல்லுாரியிலும், திருக்கோவிலுார் டி.எஸ்.பி., ராஜூ தலைமையில் ஆண்டவர் திருமண மண்டபம் மற்றும் சங்கராபுரம் தாகப்பிள்ளை திருமண மண்டபத்தில் என இரு இடங்களிலும் நடந்தது.இதில், குடும்ப பிரச்னை, பண பரிமாற்ற பிரச்னை, இடப் பிரச்னை தொடர்பாக மொத்தம் 80 மனுக்கள் பெறப்பட்டது.அதில் உடனடியாக விசாரணை நடத்தி 75 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X