விக்கிரவாண்டி; விக்கிரவாண்டியில் ஆர்ப்பாடட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள் 150 பேரை போலீசார் கைது செய்தனர.
அண்டை மாநிலங்களில் மாற்றுதிறனாளிகளுக்கு மாதம் ரூபாய் 3 ஆயிரம் வழங்குவதுபோல தமிழகத்தில் வழங்கவேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி விக்கிரவாண்டி தாலுகா அலுவலகம் முன்பு தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமை தாங்கினார். மா.கம்யூ., கிழக்கு ஒன்றிய செயலாளர் கிருஷ்ணராஜ் ஆர்பாட்டத்தை துவக்கி வைத்தார். மாவட்ட துணை தலைவர் சுப்புராயன், மாவட்ட பொருளாளர் உமா, மாவட்ட துணை செயலாளர் நடராஜன் ஆகியோர் கோரிக்கையை நிறைவேற்ற கோரி பேசினர். விக்கிரவாண்டி ஒன்றியத்தை சேர்ந்த 50 பெண்கள் உட்பட 150 பேரை சப்-இன்ஸ்பெக்டர்கள் ராஜாராமன், ஜெயபால் மற்றும் போலீசார் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் தங்கவைத்து மாலையில் விடுவித்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE