ஆர்.கே.பேட்டை; ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட நிலையிலும், பெரும்பாலான ஏரிகள் நிரம்பவில்லை, இதனால், விவசாயிகள் அதிருப்தி அடைந்துள்ளனர்.ஆர்.கே.பேட்டை பகுதியில், பாலாபுரம் ஓடை, நேசனுார் ஓடை, ஞானகொல்லிதோப்பு ஓடை என, பல்வேறு ஓடைகளில், 'நிவர்' புயல் மழை காரணமாக, வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.இதில், ஆர்.கே.பேட்டை, அம்மையார்குப்பம் ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளன. ஆனால், விளக்கணாம்பூடி, ராஜாநகரம் உள்ளிட்ட பெரும்பாலான ஏரிகள் நிரம்பவில்லை.கடந்த, 2015க்கு பின், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட, 'நிவர்' புயல் மழையில், அனைத்து நீர்நிலைகளும் நிரம்பி வழியும் என எதிர்பார்த்திருந்த விவசாயிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.'நிவர்' புயலை தொடர்ந்து, தற்போது வலு பெற்றுவரும், 'புரெவி' புயலாவது, தங்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யுமா என, காத்திருக்கின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE