ஒற்றையடி பாதையான ஏரிக்கரை சாலை

Added : டிச 03, 2020
Share
Advertisement
கடம்பத்துார்; கடம்பத்துார் ஒன்றியத்தில், ஏகாட்டூர் ஏரிக்கரை ஒன்றிய சாலை, ஒற்றையடி பாதையாக மாறி உள்ளதால், வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.கடம்பத்துார் ஒன்றியத்துக்குட்பட்டது ஏகாட்டூர் ஊராட்சி. இங்குள்ள ஏரியில், சில மாதங்களுக்கு முன், அரசு அனுமதியுடன், சவுடு மண் அள்ளும் பணி நடந்தது.இதனால், ஏகாட்டூரிலிருந்து, கடம்பத்துார் மற்றும் சேலை வழியாக, திருவள்ளூர்
 ஒற்றையடி பாதையான ஏரிக்கரை சாலை

கடம்பத்துார்; கடம்பத்துார் ஒன்றியத்தில், ஏகாட்டூர் ஏரிக்கரை ஒன்றிய சாலை, ஒற்றையடி பாதையாக மாறி உள்ளதால், வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.

கடம்பத்துார் ஒன்றியத்துக்குட்பட்டது ஏகாட்டூர் ஊராட்சி. இங்குள்ள ஏரியில், சில மாதங்களுக்கு முன், அரசு அனுமதியுடன், சவுடு மண் அள்ளும் பணி நடந்தது.இதனால், ஏகாட்டூரிலிருந்து, கடம்பத்துார் மற்றும் சேலை வழியாக, திருவள்ளூர் செல்லும் சாலையில் சென்ற சவுடு மண் லாரிகளால், சாலை மிகவும் சேதமடைந்து மோசமான நிலையில் உள்ளது.இதனால், சாலை சேறும், சகதியுமாக மாறி, ஒற்றையடி பாதை போல் மாறியுள்ளதால், டூ - வீலரில் செல்வோர் விபத்தில் சிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.எனவே, சம்பந்தப்பட்ட ஒன்றிய நிர்வாகத்தினர், சேதமடைந்து மோசமான நிலையில் உள்ள சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X