பொன்னேரி; ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் கிராமங்களை மழை நீர் சூழ்ந்ததை தொடர்ந்து, ஆற்றின் கரைகளில் மணல் மூட்டைகள் கொண்டு பலப்படுத்தும் பணியில் பொதுப்பணித் துறையினர் ஈடுபட்டு உள்ளனர்.தொடர் மழையால், ஆரணி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்குகால், பொன்னேரி அடுத்த, வஞ்சிவாக்கம் கிராமம் அருகே கரைகளில் உடைப்பு ஏற்பட்டது. மழை நீர் பிரளயம்பாக்கம், ஆண்டார்மடம் உள்ளிட்ட கிராமங்களை சூழ்ந்தது.நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கியும், வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தும், கிராமமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர்.நேற்று முன்தினம், கலெக்டர் பொன்னைய்யா, பொதுப்பணித் துறை செயற்பொறியாளர் ஜெயக்குமாரி மற்றும் அதிகாரிகள் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு தேவையான நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தினர்.அதை தொடர்ந்து, பொன்னேரி கோட்ட உதவி செயற்பொறியாளர் முருகன், உதவி பொறியாளர் கண்ணன் ஆகியோர் மேற்கண்ட பகுதியில் முகாமிட்டு, தொழிலாளர்களை கொண்டு கரைகளை பலப்படுத்தும் பணிகளில் ஈடுப்பட்டு உள்ளனர்.வஞ்சிவாக்கம் பாலம் அருகே, ஆண்டார்மடம் ஆகிய பகுதிகளில், 4,000 மணல் மூட்டைகளை கொண்டு கரைகளில் தடுப்பு ஏற்படுத்தும் பணிகளும், பொக்லைன் இயந்திரம் மூலம், கரைகளை பலப்படுத்தும் பணிகளும் நடைபெறுகின்றன.தாழ்வாக உள்ள கரைகளில், மேலும், 10 ஆயிரம் மணல் மூட்டைகளை பதிக்கும் பணிகளும் தொடர்ந்து நடைபெறும் என, பொதுப்பணித் துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE