பொது செய்தி

தமிழ்நாடு

எலக்ட்ரானிக் திரை பழுது காற்றின் தரம் மறைப்பு

Added : டிச 03, 2020
Share
Advertisement
கும்மிடிப்பூண்டி; காற்றில் கலக்கும் மாசுவின் அளவுகளை காட்டும் எலக்ட்ரானிக் திரை, ஒரு மாதமாக பழுதாகி உள்ளதால், காற்றின் தரம் மறைக்கப்படுவதாக, இயற்கை ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.கும்மிடிப்பூண்டி சிப்காட் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில், 320 தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. இவற்றில் பெரும்பாலானவை, சுற்றுச்சூழலை பாதிக்கக்கூடிய தொழிற்சாலைகள்.மாசு
 எலக்ட்ரானிக் திரை பழுது காற்றின் தரம் மறைப்பு

கும்மிடிப்பூண்டி; காற்றில் கலக்கும் மாசுவின் அளவுகளை காட்டும் எலக்ட்ரானிக் திரை, ஒரு மாதமாக பழுதாகி உள்ளதால், காற்றின் தரம் மறைக்கப்படுவதாக, இயற்கை ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

கும்மிடிப்பூண்டி சிப்காட் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில், 320 தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. இவற்றில் பெரும்பாலானவை, சுற்றுச்சூழலை பாதிக்கக்கூடிய தொழிற்சாலைகள்.மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் விதிமுறைகளுக்கு உட்பட்டு, பல தொழிற்சாலைகள் இயங்காததால், காற்று, நிலம், நீரின் தரம் சரிந்து வருவதாக, சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.சுற்றுப்புற காற்றின் தரத்தை கண்டறிய, காற்றில் கலக்கும் மாசுவின் அளவை தொடர்ந்து கண்காணிக்கும் நிலையம், கும்மிடிப்பூண்டி சிப்காட் வளாகத்தில் உள்ள ஏற்றுமதி வளர்ச்சி தொழிற்பூங்கா அலுவலகத்தில், 2016ல் அமைக்கப்பட்டது.காற்றின் தரத்தை ஒளிவு மறைவு இன்றி, பொதுமக்களும் தெரிந்து கொள்ளும் வகையில், அந்த கட்டடத்தின் முகப்பில், தொழிற்சாலை வளாக உற்பத்தியாளர்கள் சங்க அலுவலகத்தின் மேல், எலக்ட்ரானிக் திரை அமைக்கப்பட்டது.இதன் மூலம், சுற்றுப்புற காற்றில் உள்ள நுண்ணிய துகள்கள், கார்பன் ஆக்ஸைடு, சல்பர் ஆக்ஸைடு உள்ளிட்ட வேதிப் பொருட்களின் அளவுகளை தெரிந்து கொள்ள முடிந்தது. அந்த எலக்ட்ரானிக் திரை, ஒரு மாதமாக பழுதாகியுள்ளது.தொழிற்சாலைகளால், கும்மிடிப்பூண்டி பகுதியில், சுவாசிக்கும் காற்றில் கலக்கும் மாசுவின் அளவை தெரிந்து கொள்வதில் உள்ள வெளிப்படைத்தன்மை மறைக்கப்படுவதாக, சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.எலக்ட்ரானிக் திரையை சரி செய்ய, தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, எதிர்பார்க்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X