கூட்டுறவு சர்க்கரை ஆலையில் அரவை நாளை துவக்கம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கூட்டுறவு சர்க்கரை ஆலையில் அரவை நாளை துவக்கம்

Added : டிச 03, 2020
Share
திருவாலங்காடு; திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலையில், நடப்பாண்டிற்கான கரும்பு அரவை, நாளை, துவக்கப்படும் என, நிர்வாகம் அறிவித்துள்ளது.திருவாலங்காட்டில் இயங்கி வரும் திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலையில், நடப்பாண்டிற்கான கரும்பு அரவை, கடந்த மாதம், 25ம் தேதி துவங்கப்படும் என, ஆலை மேலாண் இயக்குனர் சித்ரா அறிவித்திருந்தார்.இதையடுத்து, கரும்பு விவசாயிகள் அதிகாரிகளிடம்,

திருவாலங்காடு; திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலையில், நடப்பாண்டிற்கான கரும்பு அரவை, நாளை, துவக்கப்படும் என, நிர்வாகம் அறிவித்துள்ளது.திருவாலங்காட்டில் இயங்கி வரும் திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலையில், நடப்பாண்டிற்கான கரும்பு அரவை, கடந்த மாதம், 25ம் தேதி துவங்கப்படும் என, ஆலை மேலாண் இயக்குனர் சித்ரா அறிவித்திருந்தார்.இதையடுத்து, கரும்பு விவசாயிகள் அதிகாரிகளிடம், வெட்டுவதற்கு அனுமதி கடிதம் பெற்று, கரும்பு வெட்ட துவங்கினர்.தொடர்ந்து, விவசாயிகள் வெட்டிய கரும்புகளை டிராக்டர், லாரி என, 50 வாகனம் மூலம், கடந்த மாதம், 24ம் தேதி முதல், ஆலைக்கு அனுப்பி வந்தனர்.'நிவர்' புயல் மற்றும் பல்வேறு காரணங்களால், 25ம் தேதி கரும்பு அரவை துவக்காமல், நாளைக்கு அரவை துவக்கம் தள்ளி வைத்தது. இதனால், கரும்பு விவசாயிகள், கரும்பு வெட்டும் பணியை நிறுத்தி உள்ளனர்.அரவை துவக்கம் தள்ளிப் போவதால். கரும்பு வெட்டிய விவசாயிகள் கவலையில் உள்ளனர்.இது குறித்து. திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலையின் அதிகாரி ஒருவர் கூறியதாவது:'நிவர்' புயல் காரணமாக கரும்பு அரவை, நாளை முதல் துவங்கப்பட உள்ளது. இதுவரை. கரும்பு விவசாயிகள், 800 டன் அனுப்பி வைத்து உள்ளனர்.கரும்பு அனுப்பிய விவசாயிகளுக்கு உண்டான தொகையினை அவர்களது, வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X