ஆர்.கே.பேட்டை; மழை ஓய்ந்த நிலையில், தொடரும் நீர்வரத்து காரணமாக, நேற்று அதிகாலையில், முழு கொள்ளளவை எட்டியது அம்மையார்குப்பம் ஏரி. இதையடுத்து, அம்மனுக்கு கிராம மக்கள், நேர்த்திக்கடன் செலுத்தினர்.ஆர்.கே.பேட்டை அடுத்த, அம்மையார்குப்பம் கிராமத்தின் வடக்கு பகுதியில் உள்ளது ஏரி. இந்த ஏரிக்கு, ஆந்திர மாநிலம், பாலசமுத்திரம் பகுதியில் இருந்து, நீர்வரத்து உள்ளது.'நிவர்' புயல் மழையின் போது, ஏரிக்கு நீர்வரத்து துவங்கியது. ஆனால், முழு கொள்ளளவை எட்டவில்லை. மழை ஓய்ந்த போதும், நீர்வரத்து தொடர்ந்து வருகிறது.இதையடுத்து, நேற்று அதிகாலை, அம்மையார்குப்பம் ஏரி, அதன் முழு கொள்ளளவை எட்டியது. உபரி நீர், கலங்கல் வழியாக வெளியேறியது.இதனால், மகிழ்ச்சி அடைந்த கிராமத்தினர். அம்மனுக்கு நேர்த்திக் கடனாக, ஆடு பலியிட்டனர். 2015ல், கடும் வறட்சியில் தவித்த பொதுமக்கள், இதே ஏரியில், வருண பகவானை வேண்டி, ஒப்பாரி வைத்து, சிறப்பு வழிபாடு நடத்தினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE