பொது செய்தி

தமிழ்நாடு

செய்தி சில வரிகளில்...

Added : டிச 03, 2020
Share
Advertisement
ஆர்ப்பாட்டம்பொன்னேரி: பொன்னேரியில், அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.ஆர்ப்பாட்டத்தின்போது, ஆந்திரா, தெலுங்கானா, புதுச்சேரி மாநிலங்களில், மாற்றுத்திறனாளிகளுக்கு, மாதம், 3,000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படுகிறது. அதுபோன்று வழங்க வேண்டும். அடையாள அட்டை உள்ள

ஆர்ப்பாட்டம்பொன்னேரி: பொன்னேரியில், அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.ஆர்ப்பாட்டத்தின்போது, ஆந்திரா, தெலுங்கானா, புதுச்சேரி மாநிலங்களில், மாற்றுத்திறனாளிகளுக்கு, மாதம், 3,000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படுகிறது. அதுபோன்று வழங்க வேண்டும். அடையாள அட்டை உள்ள அனைவருக்கும் உதவித்தொகை வழங்கவும், தனியார் துறைகளில், 5 சதவீதம் இட ஒதுக்கீடும் கிடைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.ஆர்ப்பாட்டத்தின் முடிவில், மாற்றுத்திறனாளிகள், பொன்னேரி - திருவொற்றியூர் சாலையில் இருந்து பேரணியாக சென்று, பொன்னேரி ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் மனு அளித்தனர்.விண்ணப்பம் வரவேற்புதிருவள்ளூர்: ஆதிதிராவிடர் நல துறையில் அலுவலக உதவியாளர் பணிக்கு, விண்ணப்பம் வரவேற்கப்படுகிறது.திருவள்ளூர் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறையின் கீழ் இயங்கும் விடுதி மற்றும் பள்ளிகளில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடத்திற்கு, விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பதாரர் எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவராக மற்றும் 10ம் வகுப்பு தவறியவர்களாக இருக்க வேண்டும்.ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தைச் சார்ந்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். வயது வரம்பு, 18 - 35. திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் விண்ணப்பம் பெற்று நேரடியாகவோ, பதிவஞ்சல் மூலமாகவோ, வரும், 12ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு, கலெக்டர் பொன்னையா கேட்டுக் கொண்டுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X