பொது செய்தி

தமிழ்நாடு

மாமல்லை கடற்கரை பாதை விரிவாக்கம் செய்வது எப்போது?

Added : டிச 03, 2020
Share
Advertisement
மாமல்லபுரம்; மாமல்லபுரத்தில், சுற்றுலா பயணியர் குவியும், கடற்கரை செல்லும் பாதையை, எப்போது விரிவாக்கம் செய்வது என, பயணியர் கேள்வி எழுப்பியுள்ளனர்.மாமல்லபுரத்தில் உள்ள, தொல்லியல் கலைச்சின்னமான கடற்கரை கற்கோவிலை காண, சுற்றுலா பயணியர் வருகின்றனர்.கோவிலை ரசிக்கும் பயணியர், கடற்கரை பகுதிக்கும் சென்று, மணல்வெளியில் உலாவுகின்றனர். பயணியர் குவியும் சூழலில், கடற்கரை
 மாமல்லை கடற்கரை பாதை விரிவாக்கம் செய்வது எப்போது?

மாமல்லபுரம்; மாமல்லபுரத்தில், சுற்றுலா பயணியர் குவியும், கடற்கரை செல்லும் பாதையை, எப்போது விரிவாக்கம் செய்வது என, பயணியர் கேள்வி எழுப்பியுள்ளனர்.

மாமல்லபுரத்தில் உள்ள, தொல்லியல் கலைச்சின்னமான கடற்கரை கற்கோவிலை காண, சுற்றுலா பயணியர் வருகின்றனர்.கோவிலை ரசிக்கும் பயணியர், கடற்கரை பகுதிக்கும் சென்று, மணல்வெளியில் உலாவுகின்றனர். பயணியர் குவியும் சூழலில், கடற்கரை செல்வதற்கான பாதை, குறுகியதாகவே உள்ளது.இது குறித்து, பயணியர் கூறியதாவது:தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்திற்கு சொந்தமான இந்த பாதையை ஆக்கிரமித்து, கைவினை உள்ளிட்ட கடைகள் அமைக்கப்பட்டு உள்ளன.மேலும், கடற்கரை செல்வதற்கான பாதையையும் ஆக்கிரமித்து வருகின்றனர். இதனால், பயணியர் செல்ல வழியின்றி, மிகவும் அவதிப்படுகின்றனர்.ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றி, கடற்கரை சென்று திரும்ப, தனித்தனி பாதை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.ஆனால், அரசியல் தலையீடு காரணமாக, அந்நடவடிக்கை நிறுத்தப்பட்டதால், குறுகிய பாதையில் செல்ல சிக்கல் நீடிக்கிறது. நடைபாதை கடைகளை அகற்றி, பயணியர் செல்வதற்கு ஏற்ற பாதை எப்போது அமைக்கப்படுமோ?இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X