சென்னை; வேளச்சேரி, ராம்நகரில் வெள்ள பாதிப்புக்கு காரணமான, உபரி நீர் கால்வாய் மூடியை அகற்ற வேண்டும் என, நலச்சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.ஒவ்வொரு பருவ மழையின்போதும், வேளச்சேரி மற்றும் சுற்றுவட்டார பகுதிகள், கடுமையாக பாதிக்கப்படும். வேளச்சேரி ஏரி உபரி நீர் கால்வாய், 1.5 கி.மீ., நீளம், 20 அடி அகலம் உடையது. கழிவுகள்இந்த கால்வாய் மற்றும் வீராங்கால் கால்வாயில் வடியும் மழைநீர், வேளச்சேரி ரயில் நிலையத்தை ஒட்டிய பகுதியில் சேர்ந்து, அங்கிருந்து பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை அடைகிறது.இரண்டு கால்வாய்களில் சேரும் மண், ஆகாய தாமரை உள்ளிட்ட கழிவுகள், ஒவ்வொரு பருவமழைக்கு முன் அகற்றப்படும். இதற்காக, பொக்லைன், ஜே.சி.பி., மற்றும் 'பாப்காட்' போன்ற இயந்திரங்கள், கால்வாய்க்குள் இறக்கப்படும்.இதனால், கால்வாயை ஒட்டி உள்ள வீடு மற்றும் வணிக நிறுவனங்கள், பொதுப்பணித் துறையின் அனுமதி வாங்கி, நிபந்தனைகளுடன், கால்வாய் மூடி அமைக்க வேண்டும்.அதாவது, இடத்தை பொறுத்து, 30 முதல், 40 அடி வரை மட்டும் வழங்கப்படும். அதுவும், 'ஸ்டீல்' பாலம் மட்டுமே கட்ட வேண்டும்; சிமென்ட் கலவை கட்டமைப்பு கூடாது.இந்நிலையில், இரண்டடுக்கு மேம்பாலம் மற்றும் சாலை விரிவாக்கத்திற்காக, ஏரி உபரிநீர் கால்வாய், 1.2 கி.மீ., துாரத்திற்கு, மூடி கால்வாயாக மாற்றப்படுகிறது. அதுவும், கால்வாய்க்குள், 'பாப்காட்' இயந்திரம் இறக்கும் வகையில், 100 அடி இடைவெளியில், 10 அடி அகலம் வீதம், 'சிலாப்' அமைத்து கட்டப்படுகிறது.அடைப்புமீதமுள்ள, 990 அடி நீள கால்வாயை ஒட்டி, வீடு மற்றும் வணிக நிறுவனங்கள் என, 14 கட்டடங்கள் உள்ளன. சில பகுதியில், காலி இடம் உள்ளது.அதில், கட்டட உரிமையாளர்கள் இருவர், 30 அடி அகலத்தில் மூடி கால்வாய் அமைத்து, மீதமுள்ள, 50 அடி அகலத்தை திறந்தவெளியாக விட்டுள்ளனர். ஐந்து பேர், 3 அடி மட்டும் திறந்தவெளி விட்டு, மீதமுள்ள பகுதியில் மூடி கால்வாய் அமைத்துஉள்ளனர்.மீதமுள்ள நபர்கள், அவர்கள் எல்லை முழுதிலும் மூடி கால்வாய் அமைத்துள்ளனர். இதனால், கால்வாய்க்குள் துார் வார முடியாமல், அடைப்பு ஏற்படுகிறது.கடிதம்தற்போதைய மழையில், ராம் நகரில் கால்வாய் நீர் புகுந்து, கடுமையான பாதிப்பு ஏற்பட்டது. பொதுப்பணித் துறை வழங்கிய அனுமதியை மீறி கட்டிய கால்வாய் மூடியை தகர்க்க வேண்டும் என, நலச்சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.இது தொடர்பாக, வேளச்சேரி ராம்நகர், அன்னை இந்திரா நகர் உள்ளிட்ட, ஐந்து நலச்சங்கங்கள், பொதுப்பணித் துறை மற்றும் நெடுஞ்சாலைத் துறைக்கு கடிதம் எழுதி உள்ளது.உபரி நீர் கால்வாயில், ஏரிநீர் மட்டுமின்றி, வேளச்சேரி விரைவு சாலையில் உள்ள கழிவு நீர் வெளியேற்று நிலைய கழிவுநீரும் கலக்கிறது. கால்வாயில், 5 அடி உயரத்தில் கழிவு நீர் சகதி உள்ளது. இதோடு, ஆகாய தாமரை, புதர்கள் மண்டி கிடக்கிறது. திறந்தவெளி கால்வாய் பகுதியில் மட்டும் தான், துார் வாரப்படுகிறது. மூடி அமைத்த இடத்தில், துார் வாராததால் கன மழையின்போது, குடியிருப்புகளில் உபரி நீர் புகுந்து, வெள்ள பாதிப்பு ஏற்படுகிறது. அதிகாரிகளிடம் முறையிட்டும் பயன் இல்லை.நலச்சங்க நிர்வாகிகள்இயந்திரம் இறக்கி, துார் வாரும் வகையில் இடத்தை விட்டு, மீதி இடத்தில் தான், மூடி கால்வாய் அமைக்க அனுமதி கொடுத்துள்ளோம். வீராங்கால் கால்வாயில் பிரச்னை இல்லை. ஏரி உபரி நீர் கால்வாயில், பலர், அனுமதியை மீறி கட்டியதாகவும், நிரந்தர கட்டமைப்பு அமைத்துள்ளதாகவும் புகார் வந்துள்ளது. தற்போது, மழைக்கால தடுப்பு நடவடிக்கை எடுத்து வருகிறோம். இதோடு, வேளச்சேரி உபரி நீர் கால்வாயில் உள்ள சட்ட விரோத கட்டமைப்புகளை அகற்றி, கால்வாய் சீரமைக்கப்படும்.பொதுப்பணித் துறை அதிகாரிகள்
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE