சென்னை; 'கட்டுமானம் மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர்கள், நல வாரியங்களில் பதிவு செய்து, நலத்திட்ட உதவிகளை பெறலாம்' என, சென்னை கலெக்டர் சீதாலட்சுமி அறிவுறுத்திஉள்ளார்.அனைத்து கட்டுமானம் மற்றும் அமைப்பு சாரா தொழிலளர்கள், நல வாரியங்களில் பதிவு செய்ய, நீதிமன்ற உத்தரவிட்டுள்ளது. தற்போது, நலவாரியங்களில் பதிவு செய்யும் முறை, எளிமையாக்கப்பட்டு உள்ளது.எனவே, சென்னையைச் சேர்ந்த தொழிலாளர்கள், www.tnwwb.tn.gov.in என்ற இணைதளத்தில், விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம்.பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, உரிய ஆவணங்களுடன், வருவாய் ஆய்வாளரிடம் கையொப்பம் பெற்று, 'இ- சேவை' மையங்களில் பதிவு செய்துக் கொள்ளலாம்.பதிவு செய்யும் தொழிலாளர்களுக்கு, திருமண நிதியுதவி, கல்வி நிதியுதவி, ஓய்வூதியம் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவி வழங்கப்படுகிறது.எனவே, அனைத்து கட்டுமானம் மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர்கள், நலவாரியத்தில் பதிவு செய்து பயனடையலாம் என, கலெக்டர் சீதாலட்சுமி தெரிவித்துள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE