பொது செய்தி

தமிழ்நாடு

எழுத்தறிவு திட்டம்: பெண்கள் உற்சாகம்

Added : டிச 03, 2020
Share
Advertisement
சென்னை; பள்ளிசாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்ககம் சார்பில் துவங்கிய, எழுத படிக்க தெரியாதோருக்கு எழுத்தறிவு வழங்கும் திட்டத்தில், முதல் நாளிலே, பெண்கள் ஆர்வமாக பங்கேற்றனர்.தமிழக எழுத்தறிவு முனைப்பு ஆணையத்தின் கீழ் செயல்படும், பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்ககம் சார்பில், 15 வயதிற்கு மேற்பட்ட எழுத, படிக்க தெரியாதோருக்கு, எழுத்தறிவு வழங்க முடிவு

சென்னை; பள்ளிசாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்ககம் சார்பில் துவங்கிய, எழுத படிக்க தெரியாதோருக்கு எழுத்தறிவு வழங்கும் திட்டத்தில், முதல் நாளிலே, பெண்கள் ஆர்வமாக பங்கேற்றனர்.தமிழக எழுத்தறிவு முனைப்பு ஆணையத்தின் கீழ் செயல்படும், பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்ககம் சார்பில், 15 வயதிற்கு மேற்பட்ட எழுத, படிக்க தெரியாதோருக்கு, எழுத்தறிவு வழங்க முடிவு செய்யப்பட்டது.சென்னை மாவட்டத்தில் நடத்திய கணக்கெடுப்பில், எழுத படிக்க தெரியாதவர்கள், 9,655 பேர் இருப்பது தெரிந்தது. அவர்களுக்கு, தமிழ், ஆங்கிலம் எழுத, படிக்கவும், அடிப்படை கணிதமும் பயிற்றுவிக்கப்படுகிறது.இதற்காக, சென்னையில் உள்ள, 395 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், 483 கற்போர் கல்வியறிவு மையங்கள் அமைக்கப்பட்டன.பிப்., 2021 வரை, தினமும், இரண்டு மணி நேரம் வீதம், 120 மணி நேரம் வகுப்புகள் நடைபெறும். அனைவருக்கும், பாடப் புத்தகங்கள், இலவசமாக வழங்கப்பட்டன.அந்தந்த பகுதியில் உள்ள தன்னார்வலர்கள் மூலம், கற்று கொடுக்கப்படுகிறது. நேற்று முன்தினம் முதல், வகுப்புகள் துவங்கின. முதல் நாளில், குடிசை பகுதியில் இருந்து, பெண்கள் அதிகமாக பங்கேற்றனர்.மூன்று மாத வகுப்பு முடிந்தபின், தேர்வு நடத்தி, சான்றிதழ் வழங்கப்பட உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X