பொது செய்தி

தமிழ்நாடு

உருக்குலைந்த துாண்டில் வளைவுகள் வரும் புயல்களை தாக்குப்பிடிக்குமா?

Added : டிச 03, 2020
Share
Advertisement
எண்ணுார்; 'நிவர்' புயலுக்கு உருக்குலைந்த துாண்டில் வளைவுகள், அடுத்தடுத்த புயல்களுக்கு தாக்குப்பிடிக்குமா என, கேள்வி எழுந்துள்ளது.சென்னை, திருவொற்றியூர், எண்ணுாரில், 22 மீனவ கிராமங்கள் உள்ளன.கடற்கரையை ஒட்டி வசிக்கும், மீனவர்களின் குடியிருப்புகள், கடல் சீற்றத்தின்போது சின்னாபின்னமாவது தொடர்கதையாக உள்ளது. அவர்களது படகுகளும் சேதமடைந்து வந்தன.'டி' வடிவம்இதற்கு

எண்ணுார்; 'நிவர்' புயலுக்கு உருக்குலைந்த துாண்டில் வளைவுகள், அடுத்தடுத்த புயல்களுக்கு தாக்குப்பிடிக்குமா என, கேள்வி எழுந்துள்ளது.

சென்னை, திருவொற்றியூர், எண்ணுாரில், 22 மீனவ கிராமங்கள் உள்ளன.கடற்கரையை ஒட்டி வசிக்கும், மீனவர்களின் குடியிருப்புகள், கடல் சீற்றத்தின்போது சின்னாபின்னமாவது தொடர்கதையாக உள்ளது. அவர்களது படகுகளும் சேதமடைந்து வந்தன.'டி' வடிவம்இதற்கு தீர்வாக, 10 ஆண்டுகளுக்கு முன், எண்ணுார், பாரதியார் நகர் - செரியன் நகர் வரையிலான கடல் பகுதியில், அலையின் வேகத்தை தடுக்கும் வகையில், 0.5 - 1 கி.மீ., வரையிலான துாண்டில் வளைவுகள், 10க்கும் மேல் அமைக்கப்பட்டன.இவற்றில் பல, புயல்களின் வேகத்திற்கு தாக்குப்பிடிக்க முடியாமல் உருக்குலைந்து, பாதி துாரத்திற்கு மட்டுமேமிஞ்சின.இதையடுத்து, எண்ணுார், நெட்டுகுப்பம் - தாழங்குப்பம் வரையிலான கடல் பகுதியில், 2013ல், திட்ட வரைவு செய்யப்பட்டு, ஐ.ஐ.டி., பரிந்துரைபடி, 31.82 கோடி ரூபாய் செலவில், 10 இடங்களில் துண்டில் வளைவுகள் அமைக்கும் பணிகள் நடந்தன.இவற்றில் மூன்று, ஆங்கில எழுத்தான, 'டி' வடிவிலான துாண்டில் வளைவுகளாகும்.இப்பணியின்போதே, பொதுப்பணித் துறை அதிகாரிகள் அலட்சியத்தால், எடை குறைந்த கற்களால் அமைக்கப்பட்ட துாண்டில் வளைவுகள், 'நடா' மற்றும் 'வர்தா' புயல்களுக்கு பறந்தன. 2017ல் பணிகள் முடிக்கப்பட்டன.இது குறித்து, நம் நாளிதழ் செய்தியை அடுத்து, துாண்டில் வளைவுகள், ராட்சத கற்களால் கட்டமைக்கப் பட்டன.மூன்றாவது கட்டமாக, 35 கோடி ரூபாயில், தாழங்குப்பம் - சின்னகுப்பம் இடையேயான கடல் பகுதியில், ஒன்பது துாண்டில் வளைவுகள், 2018 - 2019ல் அமைக்கப் பட்டன.குறிப்பாக, கடல் சீற்றத்தை வெகுவாக தணிக்கும் அளவில், 15வது துாண்டில் வளைவு, 115 மீட்டர் துாரம், 16வது துாண்டில் வளைவு, 140 மீட்டர் துாரமும், கடைசியில் மீன்பிடித் துாண்டில் கொக்கி வடிவம் போல் வளைத்து விடப்பட்டது.'நிவர்' சமீபத்தில், வங்க கடலில் உருவாகிய 'நிவர்' புயல், புதுச்சேரி அருகே, அதிதீவிர புயலாக கரையை கடந்தது. அதன் தாக்கம், வடகடலோர மாவட்டங்களிலும் பிரதிபலித்தது.பலத்த காற்றின் காரணமாக ஏற்பட்ட அலை ஆக்ரோஷத்தில், துாண்டில் வளைவுகள் சின்னாபின்னமாயின.எண்ணுார், தாழங்குப்பத்தில், கொக்கி போல் வளைத்து விடப்பட்ட துாண்டில் வளைவு, ஆர்ப்பரித்த அலைகளுக்கு ஈடுகொடுக்க முடியாமல் உருக்குலைந்தது.இந்நிலையில், 'புரேவி' புயல் உருவாகி, கன்னியாகுமரி அருகே, கரையை கடக்கும் சூழல் உள்ளது.அடுத்ததாக, 'தாக்டே' புயல் உருவாகி வட தமிழக கரையை கடக்கக் கூடும் என, வானிலை ஆய்வு மையம் அனுமானித்துள்ளது.அடுத்தடுத்து படையெடுக்கும் புயல்களுக்கு, நிலைகுலைந்த துாண்டில் வளைவுகள் தாக்குப்பிடிக்குமா என்பதில் சந்தேகம் எழுந்துள்ளது.கற்களில் 'கமிஷன்'துாண்டில் வளைவுகள் அமைப்பதில், 'கமிஷன்' பார்க்க, 100 கிலோவிற்கும் குறைவான எடையுள்ள சிறிய கற்கள் பயன்படுத்தப்படுகின்றன. 1,000 கிலோவிற்கு மேற்பட்ட கற்களையே, துாண்டில் வளைவு அமைக்க பயன்படுத்த வேண்டும். அப்போது தான், புயல்களை எதிர்கொள்ள முடியும். அலையின் சீற்றமும் தடுக்கப்படும் என, மீனவர்கள் கூறுகின்றனர்.படம் : உண்டுஅபாயம்...!எண்ணுார், தாழங்குப்பம் கடற்கரையில் இருந்து, 15க்கும் மேற்பட்ட, சிறிய ரக படகுகள்வைத்திருக்கும் மீனவர்கள், ஆழ்கடலுக்கு சென்று மீன்பிடித்து வருகின்றனர்.புயல் காலங்களில், இவ்வழியே வெளியேறும் அலைகளால், தார்ச் சாலையை மணல் மூழ்கடிக்கிறது. 'நிவர்' புயலின் போது, 1 அடி உயரத்திற்கு மணல் மேடு எழும்பி, போக்குவரத்து கடுமையாக பாதித்தது. எனவே, இவ்வழியை அடைத்து விடலாம் எனவும், இங்கு தொழில் செய்யும் மீனவர்கள், முகத்துவாரம் வழியாக கடலுக்கு சென்று மீன்பிடித்து வர, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டும்.அதேபோல், தனியார் உர தொழிற்சாலை, குளிர்ந்த நீரை கடலில் இருந்து எடுப்பதற்காக, தாழங்குப்பம் -- சின்னகுப்பம் இடையே, கற்களை அகற்றி, குழாய் அமைத்துள்ளது. இதனால், கடல் நீர் உட்புகும் அபாயமும் உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X