சென்னை: 'நிசான்' இந்தியா கார் நிறுவனம், 'ஆல் நியூ நிசான் மேக்னைட்' என்ற புதிய ரக கார், சென்னையில் நேற்று அறிமுகம் செய்யப்பட்டது.நிசான் இந்தியா கார் நிறுவனம், பயணியர் கார்களை சென்னையில் உற்பத்தி செய்து, பல்வேறு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறது. இந்தியாவிலும், பல்வேறு நகரங்களுக்கு அனுப்புகிறது.இந்நிலையில், ஆல் நியூ நிசான் மேக்னைட் என்ற புதிய ரக காரை, சென்னையில் அறிமுகம் செய்துள்ளது.எச்.ஏ.ஆர்., 0 டர்போ இன்ஜின் தொழில்நுட்பத்தில், இந்தியாவிலேயே, மேக்னைட் கார் கட்டமைக்கப்பட்டுள்ளது.லிட்டருக்கு, 20 கி.மீ., செல்லக்கூடிய வகையில், அதிக எரிபொருள் சிக்கனம் மற்றும் உயர் சக்தியுடன் இந்த கார் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆட்டோ கியர் பாக்ஸ் முறையில் இயங்கும் இந்த கார், நகர்ப்புறங்களில் போக்குவரத்து நெரிசலின் போது, சிறந்த செயல்திறனுடன் இயங்கும்.கியர் மற்றும் வேகம் போன்றவற்றை கணித்து செயல்பட, டி -ஸ்டெப் லாஜிக் கம்ப்யூட்டர் மென்பொருள் பயன்படுத்தப்பட்டுஉள்ளது. பி.எஸ்., 6 தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்டுள்ள, இந்த காரின் எக்ஸ் ஷோ ரூம் விலை, 4.99 லட்சம் ரூபாய் முதல், 9.35 லட்சம் ரூபாய் வரை கிடைக்கும் என, அந்நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.இந்த நிகழ்ச்சியில், பாரத ஸ்டேட் வங்கியின் துணைப் பொது மேலாளர் ஏ.ஜி.கே.சத்யபிரகாஷ், நிசான் மோட்டார் இந்தியா நிறுவனத்தின் மண்டல மேலாளர் அருண்பிரசாத் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.விளம்பர விருப்பம்/
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE