சென்னை: 'சமூக வலைதளத்தில், தன் படத்தை வெளியிட்டு அவதுாறு பரப்பிய நபர் மீது, நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, பா.ஜ., பிரமுகர், போலீசில் புகார் அளித்துள்ளார்.சென்னை, கோட்டூரைச் சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன், 40. இவர், போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நேற்று அளித்துள்ள புகார்:வட சென்னை பகுதியில், 13 வயது சிறுமி, கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தில், போலீஸ் இன்ஸ்பெக்டர் புகழேந்தி உட்பட பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த விவகாரத்தில், ராஜேந்திரன் என்பவர் ஈடுபட்டு இருப்பதாக தெரிய வருகிறது. ஆனால், நாளிதழ் ஒன்றில் பணிபுரியும், ஜாபர் என்பவர், ராஜேந்திரனுக்கு பதிலாக, சமூக வலைதளமான, 'பேஸ்புக்'கில், பா.ஜ., தென்சென்னை மாவட்ட செயலரான என் படத்தை வெளியிட்டுள்ளார்.உடன், கூட்டு பாலியல் விவகாரத்தில், எனக்கு தொடர்பு இருப்பது போல அவதுாறு பரப்பி உள்ளார். ஜாபர் மீது, சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE