தமிழ்நாடு

'கொடை'யில் கனமழையை எதிர்கொள்ள தயார்! 'கஜா' புயல் கற்பித்த பாடத்தால் ஏற்பாடுகள்

Added : டிச 03, 2020
Share
Advertisement
கொடைக்கானல் : கனமழையை எதிர்கொள்ள கொடைக்கானல் மலைப்பகுதியில் எல்லா வகையிலும் அரசு நிர்வாகம் தயார்படுத்தப்பட்டுள்ளது. 'புரெவி'புயலால் தென் மாவட்டங்களில் கனமழை பெய்யும் என அறிவித்துள்ளனர். மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கடந்த 2018 ல் கஜா புயல் தாக்கத்தால் வரலாறு காணாத பாதிப்பு ஏற்பட்டது. எனவே, தற்போது முன்னதாகவே அரசு நிர்வாகம் புயல், மழையை எதிர்கொள்ள

கொடைக்கானல் : கனமழையை எதிர்கொள்ள கொடைக்கானல் மலைப்பகுதியில் எல்லா வகையிலும் அரசு நிர்வாகம் தயார்படுத்தப்பட்டுள்ளது.

'புரெவி'புயலால் தென் மாவட்டங்களில் கனமழை பெய்யும் என அறிவித்துள்ளனர். மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கடந்த 2018 ல் கஜா புயல் தாக்கத்தால் வரலாறு காணாத பாதிப்பு ஏற்பட்டது. எனவே, தற்போது முன்னதாகவே அரசு நிர்வாகம் புயல், மழையை எதிர்கொள்ள தயாராகிவிட்டது. மழையின் தாக்கம் அதிகரிக்கும் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தேவை என்ற நிலை உள்ளது.

இதற்காக தீயணைப்புத் துறைக்கு ரூ. 2 லட்சம் மதிப்பில் உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன. பேரிடர் குறித்து கண்காணிக்க டம்டம் பாறை, சவரிக்காடு, கே.சி.பட்டி, பூண்டி, பெருமாள்மலை பகுதியில் 5 குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன. மரம் விழுதல், மண்சரிவை சரிசெய்ய 25 மர அறுவை இயந்திரங்கள், 13 பொக்லைன் இயந்திரங்கள் தயார் நிலையில் உள்ளன.கனமழை பெய்யும் நிலையில் பொதுமக்களை தங்க வைக்க அரசு கட்டடங்கள், உணவுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு அலுவலர்களுக்கென 'வாட்ஸ் அப்' குழுக்கள் துவக்கப்பட்டுள்ளன.

'தீ' என்ற புது செயலி மூலம் பொதுமக்கள் உதவி என்ற வசதியைகிளிக் செய்யும் நிலையில் தீயணைப்புத் துறையினர் விரைந்து மீட்பு பணியில் ஈடுபட தயாராக உள்ளனர்.ஆர்.டி.ஓ., சிவகுரு பிரபாகரன் கூறியதாவது: மஞ்சம்பட்டி உள்ளிட்ட தொலைதுார கிராமங்களுக்கும் 2 மாதங்களுக்கு தேவையான உணவு பொருட்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன.

200 மின்கம்பங்கள், அரசு அலுவலங்களில் ஜெனரேட்டர் வசதி, துறை ரீதியான அதிகாரிகளுக்கு வாக்கி டாக்கி,மழையின் அளவு, வெள்ளப்பெருக்கு குறித்த தகவல் கட்டுப்பாட்டு அறை மூலம் கண்காணிக்க வசதி செய்யப்பட்டு கனமழையை எதிர்கொள்ள அரசு துறை தயார் உள்ளது, என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X