பொது செய்தி

தமிழ்நாடு

தினமலர் செய்தி எதிரொலி; சந்தையில் மேம்பாட்டு பணி

Added : டிச 03, 2020
Share
Advertisement
அய்யலுார் : தினமலர் செய்தி எதிரொலியாக அய்யலுார் வாரச்சந்தையில் மேம்பாட்டு பணிகள் துவங்கின.வடமதுரை அருகே அய்யலுாரில் வியாழக்கிழமைகளில் தனியார் இடத்தில் வாரச்சந்தை இயங்குகிறது. இங்கு லேசான மழை பெய்தாலே சந்தை வளாகம் சேறும் சகதியுமாக மாறுகிறது. இதனால் வியாபாரிகள், பொதுமக்கள் அவதிக்குள்ளாகின்றனர்.வளாகத்திற்குள் காலியிடம் இருந்தும் பெரும்பாலான வியாபாரிகள்

அய்யலுார் : தினமலர் செய்தி எதிரொலியாக அய்யலுார் வாரச்சந்தையில் மேம்பாட்டு பணிகள் துவங்கின.

வடமதுரை அருகே அய்யலுாரில் வியாழக்கிழமைகளில் தனியார் இடத்தில் வாரச்சந்தை இயங்குகிறது. இங்கு லேசான மழை பெய்தாலே சந்தை வளாகம் சேறும் சகதியுமாக மாறுகிறது. இதனால் வியாபாரிகள், பொதுமக்கள் அவதிக்குள்ளாகின்றனர்.வளாகத்திற்குள் காலியிடம் இருந்தும் பெரும்பாலான வியாபாரிகள் திண்டுக்கல் சர்வீஸ் ரோட்டிலும், களர்பட்டி ரோட்டிலும் போக்குவரத்து இடையூறாக நின்றவாறு ஆடு, கோழி வியாபாரம் செய்கின்றனர். இதுகுறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. இதையடுத்து சந்தை நிர்வாகம் சகதி ஏற்படும் பகுதிகளில் மண் கொட்டி மேம்பாட்டு பணிகளை துவங்கியது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X