செம்பட்டி : ஆத்துார் பகுதி கிராம ஊராட்சிகளில் இறந்தோர், அரசு ஊழியர்கள் பெயரில் வேலை உறுதித்திட்ட சம்பளம் வழங்கியதாக ஒன்றிய கவுன்சிலர்கள் புகார் தெரிவித்தனர்.
ஆத்துார் ஒன்றிய கவுன்சில் கூட்டம் தலைவர் மகேஸ்வரி தலைமையில் நடந்தது. பி.டி.ஓ., ஜெயச்சந்திரன் வரவேற்றார்.விவாதம் வருமாறு:நாகவள்ளி (தி.மு.க.,): காந்தி கிராமம் ஊராட்சியில் வேலை உறுதி திட்டத்தில் வெளிமாநிலம், வெளி மாவட்டங்களில் உள்ளோர், அரசுப்பணிக்கு செல்வோரை பயனாளிகளாக்கி சம்பள பட்டுவாடா நடக்கிறது.சாதிக் (தி.மு.க.,): சித்தரேவு ஊராட்சியில் இறந்தவர்கள் பெயரில், வேலை உறுதிப்பணி அட்டை பதிவு செய்துள்ளனர். முறைகேடுகளை களைய வேண்டும்.பி.டி.ஓ.,: ஊராட்சி தலைவர்கள், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு தகவல் தெரிவித்து விசாரிக்கலாம்.
செல்வி(தி.மு.க.,): வீரக்கல் ஊராட்சி மன்ற அலுவலகம் இரவு நேரத்தில்தான் செயல்படுகிறது. அரசியல் பிரமுகர்களுக்கான கூட்டமும் அங்குதான் நடத்துகின்றனர்.பி.டி.ஓ.,: புகார் கொடுத்தால் விளக்கம் கேட்டு நடவடிக்கை எடுக்கலாம்.ஆனந்தன் (அ.தி.மு.க.,): அக்கரைப்பட்டியில் உள்ளாட்சி பிரதிநிதிகள் மின்மோட்டார் உபகரணங்களை கொண்டு சென்று விட்டனர். 3 நாட்களுக்கு மேலாக தண்ணீர் வினியோகம் பாதித்துள்ளது.பி.டி.ஓ: மின் உபகரணங்களை எடுத்துச்செல்ல யாருக்கும் அதிகாரம் இல்லை. இதுகுறித்து விசாரணை நடத்தப்படும். இவ்வாறு விவாதம் நடந்தது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE