பொது செய்தி

தமிழ்நாடு

மாடுகளுக்கு பெரியம்மை நோய்கட்டுப்படுத்தும் 'மூலிகை சிகிச்சை'

Added : டிச 03, 2020
Share
Advertisement
திண்டுக்கல் : 'மாடுகளை பாதிக்கும் பெரியம்மை நோயை மூலிகை சிகிச்சை முறையில் கட்டுப்படுத்தலாம்' என, கால்நடைத் துறையினர் ஆலோசனை வழங்கினர்.மாடுகளுக்கான பெரியம்மை நோயானது, ஈ, கொசு போன்ற ரத்தம் உறிஞ்சும் பூச்சிகள் மூலம் பரவ கூடிய வைரஸ் நோய். பாதித்த மாடுகளில் காய்ச்சல், உடல் முழுவதும் சிறிய கட்டிகள், கால்களில் வீக்கம் போன்ற அறிகுறிகள் காணப்படும்.இந்நோயை கட்டுப்படுத்த
 மாடுகளுக்கு பெரியம்மை நோய்கட்டுப்படுத்தும் 'மூலிகை சிகிச்சை'

திண்டுக்கல் : 'மாடுகளை பாதிக்கும் பெரியம்மை நோயை மூலிகை சிகிச்சை முறையில் கட்டுப்படுத்தலாம்' என, கால்நடைத் துறையினர் ஆலோசனை வழங்கினர்.

மாடுகளுக்கான பெரியம்மை நோயானது, ஈ, கொசு போன்ற ரத்தம் உறிஞ்சும் பூச்சிகள் மூலம் பரவ கூடிய வைரஸ் நோய். பாதித்த மாடுகளில் காய்ச்சல், உடல் முழுவதும் சிறிய கட்டிகள், கால்களில் வீக்கம் போன்ற அறிகுறிகள் காணப்படும்.இந்நோயை கட்டுப்படுத்த வாய் வழி மருத்துவ முறையில் வெற்றிலை 10, மிளகு 10 கிராம், கல் உப்பு 10 கிராம், வெல்லம் தேவையான அளவு சேர்த்து அரைத்து நாக்கில் தடவி கொடுக்க வேண்டும்.

முதல் நாள் 3 மணி நேரத்திற்கு ஒரு முறை கொடுக்க வேண்டும். இரண்டாம் நாளில் இருந்து ஒரு நாளைக்கு மூன்று முறை வீதம் 2 வாரங்களுக்கு கொடுக்க வேண்டும்.இதே போல் ஒரு கைப்பிடி அளவுக்கு குப்பைமேனி இலை, அம்மன் பச்சரிசி இலை, வேப்பிலை, துளசி இலை, மருதாணி இலை, மஞ்சள் துாள் 20 கிராம், பூண்டு 10 பல் சேர்த்து அரைத்து, 500 மி.லி., தேங்காய் எண்ணெய் அல்லது நல்லெண்ணெயில் கொதிக்க வைக்க வேண்டும்.

அந்த எண்ணெயை பருத்தி துணியில் தொட்டு காயங்கள் மீது அடிக்கடி ஒத்தடம் தர வேண்டும். தேய்க்கக் கூடாது. கொட்டகையை சுத்தமாக வைப்பதுடன், பாதித்த மாடுகளை தனிமைப்படுத்த வேண்டும், என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X