பொது செய்தி

தமிழ்நாடு

செய்தி சில வரிகளில்.

Added : டிச 03, 2020
Share
Advertisement
ஆர்.டி.ஓ., விசாரணைவேடசந்துார்: மல்லிகை தெருவைசேர்ந்தவர் டெய்லர் கணேசன். இவருக்கும் ராமசாமி மகள் பத்மினிக்கும் 38, இரண்டு ஆண்டுகளுக்கு முன்திருமணம் நடந்தது. கர்ப்பிணியாக இருந்த பத்மினியின் தாயார்லட்சுமியம்மாள், சிலமாதங்களுக்கு முன்இறந்தார். இதையடுத்து பத்மினியும் உடல் நலக்குறைவால், வேடசந்துார் அரசு மருத்துவமனையில் இறந்தார். பத்மினிக்கு திருமணமாகிஇரண்டு ஆண்டுகளே

ஆர்.டி.ஓ., விசாரணை

வேடசந்துார்: மல்லிகை தெருவைசேர்ந்தவர் டெய்லர் கணேசன். இவருக்கும் ராமசாமி மகள் பத்மினிக்கும் 38, இரண்டு ஆண்டுகளுக்கு முன்திருமணம் நடந்தது. கர்ப்பிணியாக இருந்த பத்மினியின் தாயார்லட்சுமியம்மாள், சிலமாதங்களுக்கு முன்இறந்தார். இதையடுத்து பத்மினியும் உடல் நலக்குறைவால், வேடசந்துார் அரசு மருத்துவமனையில் இறந்தார். பத்மினிக்கு திருமணமாகிஇரண்டு ஆண்டுகளே ஆவதால், பழநி ஆர்.டி.ஓ., விசாரணைக்குப்பின், இன்று பிரேத பரிசோதனை நடைபெற உள்ளது.

மாணவருக்கு உதவிய டி.எஸ்.பி.,

பழநி: ரயில்நிலையம் அருகே கோயில் களில் அமர்ந்து பல மாணவர்கள் அரசு வேலைக்கான தேர்வுக்கு தயாராகி வருகின்றனர். அவர்களில் போலீஸ் தேர்வுக்கு தயாராவோரை கண்டறிந்து பழநி டி.எஸ்.பி., சிவா தேர்வு குறித்து விளக்கினார். அவர்களுக்கு இலவசமாக சில புத்தகங்களை வழங்கினார். ரயில்நிலைய வளாகத்தில் பங்கேற்ற மாணவர்களின் சந்தேகங்களுக்கு பதில் அளித்தார். பழநி ரயில்வே ஸ்டேஷன் மேலாளர் பாலசுப்ரமணியன், எஸ்.ஐ.,க்கள் இசக்கிராஜா, மகேஸ்வரன் பங்கேற்றனர்.

தகராறில் இருவர் கைது

நிலக்கோட்டை, குண்டலப்பட்டி காலனியைச் சேர்ந்தவர் ரெங்கசாமி மகன் சிவக்குமார் 25. அப்பகுதியில் ஒரு பெண்ணிடம் தகராறு செய்தார். தட்டிக் கேட்கச் சென்றவர்களுடன் தகராறு ஏற்பட்டது. நிலக்கோட்டை போலீசார் சிவக்குமார், அழகுராஜ் 35, ஆகியோரை கைது செய்தனர்.

கொரோனா தடுப்பு ஆலோசனை

திண்டுக்கல்: மாநகராட்சியில் மீண்டும் தொற்று அதிகரிக்காமல் இருக்க திருமண மண்டப உரிமையாளர்களுடன் ஆலோசனை கூட்டம் நடந்தது. மாநகராட்சி கமிஷனர் பாலசுப்பிரமணியம் தலைமை வகித்தார். நகர்நல அலுவலர் லட்சிய வர்ணா பேசியது: விசேஷ நிகழ்ச்சிகளில் அரசு வழிமுறைகளை தவறாமல் கடைபிடிக்க வேண்டும். மண்டபத்திற்குள் நுழையும் போது உடல் வெப்பநிலை பரிசோதிக்க வேண்டும். கைகளை கழுவ சானிடைசர் வழங்க வேண்டும். முகக்கவசம் அணியாதவர்களை அனுமதிக்க கூடாது, என்றார்.

தொழிற்சங்க விழா

செந்துறை: பஸ் நிலையம் அருகே அண்ணா ஆட்டோ தொழிற்சங்க பெயர் பலகை திறப்பு மற்றும் கொடியேற்று விழா நடந்தது. அ.தி.மு.க., கிழக்கு மாவட்ட செயலாளர் விஸ்வநாதன் திறந்து வைத்தார். மாநில ஜெ., பேரவை இணை செயலாளர் கண்ணன் முன்னிலை வகித்தார். தெற்கு ஒன்றிய செயலாளர் மணிகண்டன், தொழிற்சங்க மாவட்ட செயலாளர் முத்தையா, ஜெ., பேரவை இணை செயலாளர் ஜெயபாலன், நெப்போலியன், சின்னாக்கவுண்டர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கருத்தடை முகாம்

சாணார்பட்டி: கொசவபட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆண்களுக்கான கருத்தடை அறுவை சிகிச்சை முகாம் நடந்தது. இரண்டு பேருக்கு டாக்டர் திருலோகசந்தர் கருத்தடை அறுவை சிகிச்சை செய்தார். கன்னியாபுரம் அம்பிகா காட்டன் மில்லில் குடும்ப நல அறுவை சிகிச்சை ஊக்குவித்தல் முகாம் நடந்தது. குடும்ப நல துணை இயக்குனர் பூங்கோதை தழும்பில்லா அறுவை சிகிச்சை குறித்து எடுத்துரைத்தார். வட்டார மருத்துவ அலுவலர் தினேஷ், மேலாளர் வீரக்குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.

சிறுவன் பலி

நத்தம்: நடுவனுரை சேர்ந்த கூலித் தொழிலாளி ஜெகதீசன் மகன் ராமன் 10, நத்தம் பள்ளியில் 5 ம் வகுப்பு படித்தார். நேற்று பெற்றோர்கள் வேலைக்கு சென்றபின், வீட்டில் தனியாக இருந்த சிறுவன் தொட்டில் கட்டி விளையாடினான். தொட்டில் கயிறு கழுத்தில் இறுகிய நிலையில் சிறுவன் கீழே கிடந்துள்ளான். நத்தம் அரசு மருத்துவமனையில் பரிசோதித்ததில் இறந்து விட்டது தெரிந்தது. நத்தம் போலீசார் விசாரிக்கின்றனர்.

மாற்றுத் திறனாளிகள் கைது

செம்பட்டி: அனைத்துவகை மாற்றுத் திறனாளிகள் உரிமை பாதுகாப்பு நலச்சங்கம் சார்பில், செம்பட்டியில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாநில துணைத்தலைவர் அப்பு தலைமை வகித்தார். 3 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். மறியலில் ஈடுபட்ட 270 பேரை கைது செய்தனர். கன்னிவாடியில் சங்க நிர்வாகி கந்தசாமி தலைமையில் மறியல் செய்த, 120 பேரை போலீசார் கைது செய்தனர்.

நெல் பண்ணைப்பள்ளி

வேடசந்துார்: வேளாண்துறையின் அட்மா திட்டத்தில் நெல்சாகுபடி பண்ணைப்பள்ளி விருதலைப்பட்டியில் நடந்தது. துணை இயக்குனர் விஜயராணி தலைமைவகித்தார். தேர்வு செய்யப்பட்ட விவசாயிகளுக்கு நெல்சாகுபடி தொழில்நுட்பம் குறித்துபயிற்சி அளிக்கப்பட உள்ளது. உதவி இயக்குநர் சின்னச்சாமி மண்பரிசோதனை, புகையிலைஆராய்ச்சி மைய இயக்குனர் மணிவேல்பேசினர். ஆராய்ச்சி மையமேலாளர் ராஜேந்திரன்,துணை அலுவலர்கள் பாலமுருகன், தனலட்சுமி பங்கேற்றனர்.

இருவர் கைது

வத்தலக்குண்டு: பஸ் ஸ்டாண்டில் பயணியிடம் பிக்பாக்கெட் அடித்த மதுரை, அலங்காநல்லுாரைச் சேர்ந்த சுமிதாவை போலீசார் கைது செய்தனர். சுந்தரராஜபுரத்தைச் சேர்ந்தவர் கவுதம் 20. பஸ் ஸ்டாண்டில் உறவினரிடம் பேச அலைபேசியை வாங்கியவர் தப்பி ஓடிய போது போலீசார் கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X