திண்டுக்கல் : திண்டுக்கல்லில் 'புரெவி'புயலால் ஏற்படும் கனமழையில் பாதிக்கப்படும் பகுதிகள் குறித்து அடையாளம் காணப்பட்டுள்ளது.
'புரெவி' புயலால் தென் மாவட்டங்களில் கனமழை மற்றும் அதிக காற்று வீசும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது. சில நாட்களாக மாவட்டத்தில் ஆங்காங்கே மழை பெய்கிறது. புயலால் வழக்கத்தை விட அதிகமான மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது பாதிப்புகள் ஏற்படும் இடங்கள் குறித்தும் அடையாளம் காணப்பட்டுள்ளது.
திண்டுக்கல் ராஜக்காப்பட்டி, பாலகிருஷ்ணாபுரம், பழநி தாமரைக்குளம், ஏ.கலையம்புத்துார், ஒட்டன்சத்திரம் சிந்தலவாடன் பட்டி, வேடசந்துார், கொடைக்கானல் வடகவுஞ்சி, புலத்துார் உட்பட 24 இடங்களில் பாதிப்புகள் ஏற்படலாம் என எதிர்பார்க்கின்றனர். இங்கு வெள்ளத்தடுப்பு நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. 24 மணி நேரமும் பேரிடர் மீட்புத் துறையினர் தயாராக உள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE