* கரடு, முரடான ரோடு
மதுரை ஆரப்பாளையம் டி.டி., ரோடு முதல் சிம்மக்கல் மாவட்ட மைய நுாலகம் வரை உள்ள ரோடு கரடு, முரடாக உள்ளது. கூடல்நகர் அருகே தினமணிநகரில் ரோடுகளில் திரியும் மாடுகளால் தொல்லையாக இருக்கிறது. - கற்பகம், ஆரப்பாளையம். ///
* தெருவில் ஓடும் கழிவுநீர்
மதுரை பைபாஸ் ரோடு நேரு நகர் கிருஷ்ணா தெருவில் ஒரு மாதமாக கழிவுநீர் தெருவில் ஓடுகிறது. இதனால் தெருவில் நடமாட முடியவில்லை. துர்நாற்றம், கொசு கடி என மிகுந்த சிரமத்தில் வாழ்கிறோம். - செந்தில்குமார், நேரு நகர். ///
* வீடுகளில் கண்மாய் நீர்
மதுரை ஆனையூர் ஆபீசர்ஸ் டவுன் 2வது தெருவில் உள்ள வீடுகளில் ஆனையூர் கண்மாய் நீர் அடிக்கடி புகுந்து விடுகிறது. நீரை வெளியேற்ற முடியாமல் தவிக்கும் எங்களுக்கு அதிகாரிகள் நிரந்தர தீர்வு காண வேண்டும். - சாரதா, ஆனையூர்.
பரவை மீனாட்சி மில் காலனியில் உள்ள இரண்டு பாலங்கள் உடைந்ததால் கண்மாய் நீர் இங்குள்ள வீடுகளுக்குள் புகுந்து விடுகிறது. பாலத்தை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா.- செந்தில்குமார், பரவை.///
* தெருவில் மழைநீர் குளம்
மேலுார் நகராட்சி 1வது வார்டு பல்லவராயன்பட்டி ஆசைநகர் தெரு மேடு, பள்ளங்களாக உள்ளதால் குளம் போல் மழைநீர் தேங்குகிறது. மழைநீர் தேங்கிய பள்ளங்களால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்குகின்றனர். - ராஜ், ஆசைநகர். ///
* அமைக்கப்படாத ரோடு
பொன்மேனி சுரேந்திரன் 2 -6 தெருக்களில் பாதாள சாக்கடை பணிகள் முடிந்தும் இதுவரை ரோடு அமைக்கப்படவில்லை. தெருக்களில் நடந்து செல்லமுடியவில்லை. - மலையப்பன், பொன்மேனி. ///
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE