கோர்ட் செய்தி

தமிழ்நாடு

பொன்முடி வழக்கு 11க்கு ஒத்திவைப்பு

Added : டிச 03, 2020
Share
Advertisement
விழுப்புரம் : தி.மு.க., முன்னாள் அமைச்சர் பொன்முடி மீதான செம்மண் குவாரி வழக்கு விசாரணை வரும் 11ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.விழுப்புரம் மாவட்டம், வானுார் தாலுகா, பூத்துறையில் செம்மண் குவாரி இருந்தது. இதில் விதி மீறி, அரசுக்கு பல கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதன் பேரில் தி.மு.க., முன்னாள் அமைச்சர் பொன்முடி, அவரது மகன் கவுதமசிகாமணி எம்.பி.,

விழுப்புரம் : தி.மு.க., முன்னாள் அமைச்சர் பொன்முடி மீதான செம்மண் குவாரி வழக்கு விசாரணை வரும் 11ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
விழுப்புரம் மாவட்டம், வானுார் தாலுகா, பூத்துறையில் செம்மண் குவாரி இருந்தது. இதில் விதி மீறி, அரசுக்கு பல கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதன் பேரில் தி.மு.க., முன்னாள் அமைச்சர் பொன்முடி, அவரது மகன் கவுதமசிகாமணி எம்.பி., கோதகுமார், ராஜமகேந்திரன், ஜெயச்சந்திரன், சதானந்தன், லோகநாதன், கோபிநாத் உள்ளிட்ட 8 பேர் மீது, மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிந்தனர்.
இவ்வழக்கு விசாரணை, விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வருகின்றது. நேற்று நடந்த வழக்கு விசாரணையின்போது முன்னாள் அமைச்சர் பொன்முடி, கவுதமசிகாமணி எம்.பி., உள்ளிட்ட 8 பேரும் ஆஜராகவில்லை.இதனால், வழக்கு விசாரணையை வரும் டிச., 11ம் தேதிக்கு, ஒத்திவைத்து நீதிபதி இளவழகன் உத்தரவிட்டார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X