பொது செய்தி

இந்தியா

"உங்களை நம்பி வந்தா கனி கிடைக்காது; களி தான் கிடைக்கும்

Updated : டிச 03, 2020 | Added : டிச 03, 2020 | கருத்துகள் (18)
Share
Advertisement
கல்வியும், வேலைவாய்ப்பும் மட்டும் இன்னும் வன்னியர்களுக்கு எட்டாக்கனியாகவே இருக்கிறது. அந்த நிலையை மாற்றி, சமூக நீதி என்ற கனியை வன்னியர்களும் சுவைக்க வேண்டும் என்பதற்காகவே, சென்னையில், 4ம் தேதி மாபெரும் போராட்டம் நடத்தப்படுகிறது. இதில், லட்சக்கணக்கில் பாட்டாளிகள் பங்கேற்க வேண்டும்.- பா.ம.க., நிறுவனர் ராமதாஸ்'உங்களை நம்பி வந்தா, கனி கிடைக்காது; களி தான் கிடைக்கும்
"உங்களை நம்பி வந்தா கனி கிடைக்காது; களி தான் கிடைக்கும்

கல்வியும், வேலைவாய்ப்பும் மட்டும் இன்னும் வன்னியர்களுக்கு எட்டாக்கனியாகவே இருக்கிறது. அந்த நிலையை மாற்றி, சமூக நீதி என்ற கனியை வன்னியர்களும் சுவைக்க வேண்டும் என்பதற்காகவே, சென்னையில், 4ம் தேதி மாபெரும் போராட்டம் நடத்தப்படுகிறது. இதில், லட்சக்கணக்கில் பாட்டாளிகள் பங்கேற்க வேண்டும்.
- பா.ம.க., நிறுவனர் ராமதாஸ்


'உங்களை நம்பி வந்தா, கனி கிடைக்காது; களி தான் கிடைக்கும் என்பதை விபரம் அறிந்தவர்கள் புரிந்து கொள்வர்' எனக் கூறத் தோன்றும் வகையில், பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் அறிக்கை.'நிவர்' புயலின் போது, அரசு விடுத்த முன்னெச்சரிக்கையின் காரணமாக, பெரும் அளவில், உயிரிழப்பும், பொருள் இழப்பும் தவிர்க்கப்பட்டது. அதேபோல், தற்போது உருவாகியுள்ள, 'புரெவி' புயலுக்காக, அரசு எடுக்கும் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும், அறிவுரைகளையும், முழுமையாக கடைப்பிடிக்க வேண்டும்.
- த.மா.கா., தலைவர் வாசன்


'அ.தி.மு.க., கூட்டணியில இருக்காரா அல்லது அந்தக் கட்சியின் செய்தி தொடர்பாளரா மாறிட்டாரா...' என சந்தேகிக்க தோன்றும் வகையில், த.மா.கா., தலைவர் வாசன் அறிக்கை.அமெரிக்க அதிபர் தேர்தலில், மிகப்பெரிய அளவில் மோசடிகள் நடந்துள்ளன. இது, அனைவருக்கும் தெரியும். ஒபாமாவை விட, ஜோ பைடன் கருப்பின சமூகத்திடம் இருந்து அதிக ஓட்டுகளை பெறவில்லை என்பது, அவர்களுக்கும் நன்கு தெரியும். நிச்சயம், 8 கோடி ஓட்டுகளை அவர் பெறவில்லை.
- அமெரிக்க அதிபர் டிரம்ப்


'இனவாதம் பேசி, பேசியே தோல்வி அடைந்தாலும், நான் திருந்துவேனாக்கும் என்பது போல' அமெரிக்க அதிபர் டிரம்ப் பேட்டி.டில்லி எல்லையில் போராடும் விவசாயிகள், ராம் லீலா மைதானம், ஜந்தர் மந்தர் மைதானம் ஆகிய இடங்களை கேட்கின்றனர். இதை அளிப்பதில், மத்திய அரசுக்கு என்ன தயக்கம்? வன்முறையின்றி, அறவழியில் போராட்டம் செய்வதை மத்திய அரசு அனுமதிப்பது தான், ஜனநாயக வழிமுறையாகும்.
- தி.க., தலைவர் வீரமணி


latest tamil news

மத்திய அரசுக்கு எதிரான போராட்டம் என்றால், கண்களை மூடி ஆதரிப்பது என்ற மனோபாவத்தில் உள்ள, தி.க., தலைவர் வீரமணி அறிக்கை.தேர்தலில் தன் பங்களிப்பு, புதிய கட்சி துவங்குவது குறித்து, அழகிரி தெரிவித்தது அவரது சொந்த கருத்து. இது ஜனநாயக நாடு. யார் வேண்டுமானாலும் கட்சி துவங்கலாம்; அரசியலில் ஈடுபடலாம்.
- தி.மு.க., மகளிர் அணி செயலர் கனிமொழி


'அழகிரிக்கு ஆதரவாக பேசினாலும் தப்பு; எதிர்த்து பேசினாலும் தப்பு' எனக் கருதி, நாசூக்காக நழுவும் வகையில், தி.மு.க., மகளிர் அணி செயலர் கனிமொழி பேட்டி.லோக்சபா தேர்தலில், தி.மு.க., கூட்டணி எப்படி வெற்றி பெற்றதோ, அதேபோல, வரும் சட்டசபை தேர்தலிலும் அமோக வேற்றி பெறும்.
- திருப்பூர் இந்திய கம்யூ., - எம்.பி., சுப்பராயன்


'கடவுளையே நம்பாத காம்ரேட்கள், எப்போது, ஜோதிடம் கணிக்க ஆரம்பித்தனர்...' என கிண்டலாக கேட்க தோன்றும் வகையில், திருப்பூர் இந்திய கம்யூ., - எம்.பி., சுப்பராயன் பேச்சு.


Advertisement


வாசகர் கருத்து (18)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ponssasi - chennai,இந்தியா
04-டிச-202017:34:56 IST Report Abuse
ponssasi என்னுடன் படித்த வன்னிய மாணவ நண்பர்கள் எல்லாம் இன்று அரசு வேலையில் உள்ளனர். அவர்களை விட சிறப்பாக படித்த என்னால் எத்துணை தேர்வு எழுதியும் முடியவில்லை. வாக்கு வங்கியை தக்கவைத்துக்கொள்ள ப மா க நடத்தும் சாதி போராட்டம். அரசும் மற்ற சமூகத்தினரும் கவனம் செலுத்தவேண்டிய நேரமிது.
Rate this:
Cancel
konanki - Chennai,இந்தியா
03-டிச-202018:17:04 IST Report Abuse
konanki பாமாகா நடத்தும் இட ஒதுக்கீடு போராட்டத்திற்கு பெரியார் திடலை வீரமணி தர வேண்டும்.
Rate this:
Cancel
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
03-டிச-202017:35:15 IST Report Abuse
J.V. Iyer வரும் சட்டசபை தேர்தலில் ரஜனி கட்சி-பாஜக அமோக வேற்றி பெறும்.
Rate this:
03-டிச-202020:15:56 IST Report Abuse
வெற்றிக்கொடி கட்டு சிங்கிகள் MInd VOICE அப்பாடா NOTAAVAI முந்தி விடுவோம்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X