ஈரோடு: வேட்டுவ கவுண்டர்களுக்கு, தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்க வேண்டும் என்ற நிபந்தனை முன் வைக்கப்பட்டது. கொங்குநாடு வேட்டுவகவுண்டர் மற்றும் இளைஞரணி மாநில துணைத் தலைவர் முனுசாமி, எம்.பி., கனிமொழியிடம் அளித்த மனு விபரம்: எங்கள் சமூகத்தை சேர்ந்தவர்களுக்கு, கட்சியில் பதவியும், 2016 சட்டசபை தேர்தல், லோக்சபா தேர்தலின் போது, தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கோரி இருந்தோம். ஆனால் வழங்கப்படவில்லை. தேர்தலில் போட்டியிட வாய்ப்பு, கட்சி பதவி அளிப்பதாக உறுதியளிக்கும் பட்சத்தில், தி.மு.க.,வுடன் இணைந்து தேர்தல் பணியாற்றுவோம். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE