ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில், நாளை (4) முதல், 17 இடங்களில் அரசின் நேரடி நெல் கொள்முதல் மையங்கள் திறக்கப்படுகிறது.
இது குறித்து, கலெக்டர் கதிரவன் கூறியதாவது: நடப்பு சாகுபடி பருவத்தில், பவானிசாகர் அணைக்கட்டில் இருந்து தடப்பள்ளி, அரக்கன்கோட்டை மற்றும் காளிங்கராயன் கால்வாய் ஆயக்கட்டு பாசனத்துக்கு நீர் திறக்கப்பட்டது. இப்பகுதியில் சாகுபடியான நெற்பயிரில், தற்போது அறுவடை துவங்கி உள்ளது. தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் மூலம், 17 இடங்களில் அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்க முடிவானது. இதன்படி, நாளை முதல் புதுவள்ளியாம்பாளையம், ஏளூர், நஞ்சை புளியம்பட்டி, எஸ்.பி.அக்ரஹாரம் பகுதியிலும், வரும், 10 முதல், கரட்டடிபாளையம், மேவாணி, கூகலூர், நஞ்சைகவுண்டன்பாளையம், புதுக்கரைப்புதூர், பி.மேட்டுப்பாளையம், சவுண்டப்பூர் (அத்தாணி), காசிபாளையம், டி.என்.பாளையம், கள்ளிப்பட்டி, பொன்னாச்சிபுதூர், பொலவகாளிபாளையம், கருங்கரடு ஆகிய, 17 இடங்களிலும் செயல்படும். இம்மையங்களில் 'ஏ' கிரேடு ரக நெல் குவிண்டால், 1,958 ரூபாய் விகிதத்திலும், சாதாரண ரக நெல் குவிண்டால், 1,918 ரூபாய் விகிதத்திலும் கொள்முதல் செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE