பொது செய்தி

தமிழ்நாடு

போலி பணி நியமன ஆணை: பல லட்சம் ரூபாய் மோசடி

Added : டிச 03, 2020
Share
Advertisement
ஈரோடு: ஈரோடு அடுத்த, நன்செய் ஊத்துக்குளி சாமிநாதபுரத்தை சேர்ந்த செந்தில்குமார், 31, நேற்று ஈரோடு எஸ்.பி., அலுவலகத்தில் அளித்த புகார் மனு: இன்ஜினியரிங் படித்து உள்ளேன். ஈரோடு பூந்துறை ரோட்டை சேர்ந்த ஒருவர் என்னிடம் அறிமுகமாகி, தனக்கு அரசு உயர் அதிகாரிகளையும், அரசியல் பிரமுகர்களையும் தெரியும். வருவாய் துறையில் இளநிலை உதவியாளர் பணியை, வாங்கி கொடுப்பதாக உறுதி அளித்தார்.

ஈரோடு: ஈரோடு அடுத்த, நன்செய் ஊத்துக்குளி சாமிநாதபுரத்தை சேர்ந்த செந்தில்குமார், 31, நேற்று ஈரோடு எஸ்.பி., அலுவலகத்தில் அளித்த புகார் மனு: இன்ஜினியரிங் படித்து உள்ளேன். ஈரோடு பூந்துறை ரோட்டை சேர்ந்த ஒருவர் என்னிடம் அறிமுகமாகி, தனக்கு அரசு உயர் அதிகாரிகளையும், அரசியல் பிரமுகர்களையும் தெரியும். வருவாய் துறையில் இளநிலை உதவியாளர் பணியை, வாங்கி கொடுப்பதாக உறுதி அளித்தார். அதற்கு, 2 லட்சம் ரூபாய் கொடுக்க வேண்டும் என்றார். அவரிடம், 1 லட்சத்தை முன்பணமாக கொடுத்தேன். கடந்தாண்டு மே மாதம், ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில், எனக்கு வேலை வாங்கி கொடுப்பதாக கூறியவரும், மேலும் சிலரும் வந்து, தமிழக அரசு முத்திரையுடன் கூடிய பணி நியமன ஆணையை வழங்கினர். இதனால் மீதமுள்ள, 1 லட்சத்தையும் கொடுத்தேன். அரசிடம் இருந்து தகவல் வந்ததும், பணிக்கு சேர்ந்து விடலாம் என்றனர். ஓராண்டாகியும் எந்த தகவலும் வரவில்லை. பணி நியமன ஆணையை பற்றி விசாரித்தபோது, அது போலி முத்திரையுடன் கூடிய பணி நியமன உத்தரவு என, தெரியவந்தது. அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து, பணத்தை மீட்டு கொடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளார். இதேபோல், தஞ்சாவூர் மாவட்டம், மருங்குளம் திலகர் தெருவை சேர்ந்த ராஜூ, 29, உட்பட பாதிக்கப்பட்ட சிலரும் எஸ்.பி., அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X