ஈரோடு: கோவிலில் குற்றசம்பவங்களை தடுக்கவும், கோவில் சொத்துக்கள், பொருட்கள், நகைகள், சிலைகள் திருட்டு போவதை கண்காணிக்க, அனைத்து கோவில்களிலும், 'சிசிடிவி' கேமராக்கள் கட்டாயம் பொருத்த வேண்டும் என, ஹிந்து சமய அறநிலையத்துறை, செயல் அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளது. ஈரோடு, கருங்கல்பாளையம் சின்னமாரியம்மன் கோவில் கும்பாபி?ஷகம் கடந்த மாதம் நடந்தது. தற்போது ஆண்டு திருவிழா தொடங்கியுள்ளது. கோவில் பிரகாரத்தில் நடப்பட்டுள்ள கம்பத்திற்கு, தினமும் பலர் தீர்த்தம் எடுத்து வந்து ஊற்றி வருகின்றனர். இந்நிலையில், கோவில் பாதுகாப்புக்காக உபயதாரர் பங்களிப்புடன், 12 'சிசிடிவி' கேமராக்கள் பொருத்தப்பட்டன. முன் மண்டபம், வெளிகோபுரம், பின்பகுதி, குண்டம் உள்ள பகுதிகளில் பொருத்தப்பட்ட, கேமராக்கள் நேற்று முன்தினம் முதல் இயங்கி வருகிறது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE