பொது செய்தி

தமிழ்நாடு

கூட்டுறவு சங்கத்தை முற்றுகையிட்டு பால் உற்பத்தியாளர்கள் போராட்டம்

Added : டிச 03, 2020
Share
Advertisement
பவானிசாகர்: பவானிசாகர் அருகே, கொள்முதல் செய்த பாலின் தரம் குறைவாக இருப்பதாக கூறி, ஆவின் நிர்வாகம் திருப்பி அனுப்பியதால், பால் உற்பத்தியாளர்கள் முற்றுகையில் ஈடுபட்டனர். பவானிசாகர் அடுத்துள்ள, எஸ்.ஆலாம்பாளையத்தில் மகளிர் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கம் உள்ளது. இங்கு, நேற்று முன்தினம் கொள்முதல் செய்யப்பட்ட, பாலின் தரம் குறைவாக இருந்ததாக கூறி, ஆவின் நிர்வாகம்

பவானிசாகர்: பவானிசாகர் அருகே, கொள்முதல் செய்த பாலின் தரம் குறைவாக இருப்பதாக கூறி, ஆவின் நிர்வாகம் திருப்பி அனுப்பியதால், பால் உற்பத்தியாளர்கள் முற்றுகையில் ஈடுபட்டனர். பவானிசாகர் அடுத்துள்ள, எஸ்.ஆலாம்பாளையத்தில் மகளிர் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கம் உள்ளது. இங்கு, நேற்று முன்தினம் கொள்முதல் செய்யப்பட்ட, பாலின் தரம் குறைவாக இருந்ததாக கூறி, ஆவின் நிர்வாகம் மூன்று கேன் பாலை, நேற்று காலை திருப்பி அனுப்பியது. இந்நிலையில், நேற்று காலை கூட்டுறவு சங்கத்தில், பால் ஊற்றுவதற்காக சிலர் சென்ற போது, ஆவின் நிர்வாகம் பாலை திருப்பி அனுப்பிய தகவல் கூறப்பட்டது. ஆவேசமடைந்த பால் உற்பத்தியாளர்கள், கூட்டுறவு சங்கம் முன் முற்றுகையில் ஈடுபட்டனர்.


பால் உற்பத்தியாளர்கள் கூறியதாவது: வழக்கமாக பாலின் கொழுப்பு சத்து அளவு, 27 முதல், 28 டிகிரி வரை இருந்தால், கொள்முதல் செய்யப்படும் என, ஆவின் நிர்வாகம் கூறியுள்ளது. திருப்பி அனுப்பப்பட்ட பாலின் கொழுப்பு சத்து அளவு, 25 டிகிரி மட்டுமே உள்ளதாக, ஆவின் நிர்வாகம் கூறியது. பாலின் தரம் குறைவாக இருப்பது குறித்து, முறையாக தகவல் தெரிவிக்க வேண்டும். பாலை திருப்பி அனுப்பி விட்டு, பணம் தர முடியாது என, கூறினால் நாங்கள் என்ன செய்ய முடியும். இவ்வாறு அவர்கள் கூறினர். தரம் குறைவாக இருப்பதாக கூறி, திருப்பி அனுப்பப்பட்ட பாலுக்கு, பணம் வழங்கப்படும் என, ஆவின் அதிகாரிகள் உறுதி அளித்ததை தொடர்ந்து, பால் உற்பத்தியாளர்கள் கலைந்து சென்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X