பொது செய்தி

தமிழ்நாடு

குப்பை கொட்டும் இடத்தில் விளக்கேற்றி விழிப்புணர்வு

Added : டிச 03, 2020
Share
Advertisement
கோபி: குப்பை கொட்டும் இடத்தை சுத்தம் செய்து கோலமிட்டு, ஒரு வாரத்துக்கு விளக்கேற்றி, கோபி நகராட்சியில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். பொதுமக்கள் அதிகம் குப்பை கொட்டும் பகுதியை தேர்வு செய்து, அந்த இடத்தை சுத்தம் செய்து, கோலமிட்டு, அனைவரும் கவரும் வகையில், ஒரு வாரத்துக்கு விளக்கேற்றி கொண்டாட, ஈரோடு மாவட்டம், கோபி நகராட்சி கமிஷனர் தாணுமூர்த்தி

கோபி: குப்பை கொட்டும் இடத்தை சுத்தம் செய்து கோலமிட்டு, ஒரு வாரத்துக்கு விளக்கேற்றி, கோபி நகராட்சியில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். பொதுமக்கள் அதிகம் குப்பை கொட்டும் பகுதியை தேர்வு செய்து, அந்த இடத்தை சுத்தம் செய்து, கோலமிட்டு, அனைவரும் கவரும் வகையில், ஒரு வாரத்துக்கு விளக்கேற்றி கொண்டாட, ஈரோடு மாவட்டம், கோபி நகராட்சி கமிஷனர் தாணுமூர்த்தி உத்தரவிட்டிருந்தார். மேலும், குப்பையை தரம்பிரித்து, தூய்மை பணியாளர்களிடம் ஒப்படைப்பது குறித்து, விழிப்புணர்வு ஏற்படுத்த உத்தரவிட்டிருந்தார். அதன்படி, சுகாதார அலுவலர் செந்தில்குமார், ஆய்வாளர் கார்த்திக் அடங்கிய குழுவினர், நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில், மக்கள் அதிகம் குப்பை கொட்டும் இடத்தை தேர்வு செய்தனர். பாரியூர் பிரிவு, அண்ணா வீதி, சீத்தாலட்சுமிபுரம் மற்றும் சரவணா தியேட்டர் சாலை ஆகிய பகுதிகளில், நேற்று முன்தினம் இரவு முதல், கோலமிட்டு நகராட்சி பணியாளர்களை கொண்டு, விளக்கேற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். இம்முயற்சிக்கு மக்களிடம் வரவேற்பு உள்ளதாக, நகராட்சி சுகாதார பிரிவினர் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X