சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஜெலட்டின் வெடி மருந்து விற்பனை செய்த இருவர் கைது

Added : டிச 03, 2020
Share
Advertisement
ஈரோடு: ஈரோட்டில், ஜெலட்டின் வெடி மருந்து விற்பனை செய்த, இருவரை போலீசார் கைது செய்தனர். ஈரோடு, வைராபாளையம் செங்கோட்டையன் நகர், செங்கல் சூளை அருகே வசிப்பவர் வசந்த குமார், 32. கடந்த, 30 மாலை வைரா பாளையம் காவிரி ஆற்றில், ஜெலட்டின் வெடியை பயன்படுத்தி, அந்த அதிர்ச்சியில் சாகும் மீன்களை பிடித்து கொண்டிருந்தார். வெடியை பற்ற வைத்தபோது, ஆற்றில் வீசுவதற்கு முன்பாகவே வெடித்தது. இதில்,

ஈரோடு: ஈரோட்டில், ஜெலட்டின் வெடி மருந்து விற்பனை செய்த, இருவரை போலீசார் கைது செய்தனர். ஈரோடு, வைராபாளையம் செங்கோட்டையன் நகர், செங்கல் சூளை அருகே வசிப்பவர் வசந்த குமார், 32. கடந்த, 30 மாலை வைரா பாளையம் காவிரி ஆற்றில், ஜெலட்டின் வெடியை பயன்படுத்தி, அந்த அதிர்ச்சியில் சாகும் மீன்களை பிடித்து கொண்டிருந்தார். வெடியை பற்ற வைத்தபோது, ஆற்றில் வீசுவதற்கு முன்பாகவே வெடித்தது. இதில், வசந்தகுமாரின் இரண்டு கைகளும் துண்டானது. தற்போது, சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். கருங்கல்பாளையம் போலீசார் வழக்குபதிவு செய்து நடத்திய விசாரணையில், சேலம் மாவட்டம், சங்ககிரி சின்னகவுண்டனூரை சேர்ந்த ரிக்வண்டி உரிமையாளர் குமார், 27, என்பவரிடம் இருந்து, கருங்கல்பாளையம் சொக்காய் தோட்டத்தை சேர்ந்த சுமை தூக்கும் தொழிலாளி விஜய், 23, ஜெலட்டின் குச்சியை வாங்கியதும், அவரிடம் இருந்து, வசந்தகுமார் பெற்றதும் தெரியவந்துள்ளது. இந்நிலையில், குமார், விஜய் ஆகியோரை கருங்கல்பாளையம் போலீசார் கைது செய்தனர். யார் யாருக்கு ஜெலட்டின் குச்சிகள் வினியோகம் செய்யப்பட்டது; வாங்கி செல்லும் நபர்கள் எந்தெந்த வகையில் வெடி மருந்தை பயன்படுத்துகின்றனர். தினமும் ஈரோடு மாவட்டத்துக்குள் வரும் வெடி மருந்தின் அளவு உள்ளிட்டவை குறித்து, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X