ஆத்தூர்: ஆத்தூரில், தடையை மீறி ஏர் கலப்பையுடன் ஊர்வலமாக சென்ற காங்., கட்சியினர் 76 பேரை, போலீசார் கைது செய்தனர். மத்திய அரசின் வேளாண் திருத்த சட்டத்தை திரும்ப பெறக்கோரி, சேலம் கிழக்கு மாவட்ட காங்., சார்பில், ஆத்தூர், உடையார்பாளையத்தில் இருந்து, ஏர் கலப்பை, மாட்டு வண்டி, டிராக்டர்களுடன் ஊர்வலம், நேற்று தொடங்கியது. காந்தி சிலையில் தொடங்கிய ஊர்வலம், காமராஜர் சாலையை அடைந்தபோது, அவர்களை, போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால், அவர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, தள்ளுமுள்ளாக மாறியது. இதனால், காங்., கட்சியினர், சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், மாவட்ட தலைவர் அர்த்தனாரி, மாநில செயற்குழு உறுப்பினர் மோகன் குமாரமங்கலம் உள்பட, 76 பேரை, ஆத்தூர் டவுன் போலீசார் கைது செய்தனர். அதேபோல், இடைப்பாடி பஸ் ஸ்டாண்டில், சேலம் மேற்கு மாவட்ட, காங்., தலைவர் முருகன் தலைமையில், ஆர்ப்பாட்டம் நடந்தது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE